-
பிரித்தாணியாவாழ் இலங்கை முஸ்லீம்களுக்கு SLIF விடுக்கும் அறிவித்தல்
-SLIF பிரித்தாணியாவில் உள்ள ‘சிறிலங்கா இஸ்லாமிய போரம்’ அங்கு வசிக்கும் இலங்கை முஸ்லிம்களிடத்தில், இலங்கையிலுள்ள வரிய குடும்பத்தினர் ஒருவரின் பெருநாள் உணவுக்கான ஸதகாவாக 10 பவுண்ஸ் அன்பளிப்பினை செய்யுமாறு கேட்டிருக்கின்றது.
-
PMGGயின் திறந்த இப்தார் நிகழ்வு
-AMA. அஸீஸ் /pmgg.org நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த திறந்த இப்தார் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்.
-
இஃதிகாஃப்
– அபூ அப்துல்லாஹ் : இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம்.
-
இணையத்தளங்களும் ஏமாற்று வித்தைகளும்…
இவ் ஆக்கம் சமகாலத்தில் இணையத்தளங்களில் இவ்வாறான சிக்கலில் முகம் கொடுத்துவரும் இணையத்தள உபயோகிப்பாளர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது. -MJ இணையத்தள பயன்பாடுகளுக்கு மத்தியில் இணையத்தள ஏமாற்று வித்தைகளும் இன்று உலகில் பலகோடி மக்களின் வாழ்க்கையில் விளையாடி வருகின்றன. இவற்றுள் பிரதானமாக இணையத்தள பாவனையாளர்களை தந்திரமாக ஏமாற்றி பணம் பறிக்கும் பல்லாயிரம் இணையத்தளங்கள் இன்று வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
-
லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
– அபூ அப்துல்லாஹ் : லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின்…
-
சவுதி வீராங்கனை: தோல்வியிலும் ஓர் சாதனை!
-MJ பல சமய அழுத்தங்களுக்கு மத்தியில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சவுதி வீராங்கனைகள் களமிறங்கியிருந்ததை யாவரும் அறிவோம். சவுதி அரேபியா சார்பாக இரு பெண்கள் இம்முறைக்கான ஒலிம்பிக்கில் முதன்முறையாக பங்குபற்றியிருந்தனர். ஓட்ட வீராங்கனையான ஸாரா அத்தாரும், ஜூடோ வீராங்கனையான வொட்ஜான் சாஹிர்கணி ஆகியோரே இரு பெண்களாவர்.
-
வினாவிற்கு விடையளிக்க முயற்சித்த சகல மாணவருக்கும் முழுப்புள்ளிகள்
(உ/த) பரீட்சை: இணைந்த கணித வினாத்தாள்கள் சர்ச்சை உயிரியல் வினா பத்திரத்தில் பிழைகள் இல்லை -தினகரன் க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் இணைந்த கணிதம் வினாத்தாள் யி இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த 15 வது வினாவிற்கு விடையளிக்க முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான முழுமையான புள்ளிகளை (1 1/2) வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஸ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
ஒலிம்பிக் ➵ உசைன் போல்ட் ➵ ஜமய்க்கா ➵ சாதனைகள்…..
-MJ சற்று முன்னர் இடம்பெற்று முடிந்த மெய்வல்லுநர் போட்டியின் 200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர்கள் 3 பதக்கங்களையும் பெற்று சரித்திரம் படைத்திருக்கின்றனர்.
-
வசூல் ராணியான யாழ். மாநகர முதல்வர்?
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 24 ம் திகதி ஆரம்பமாகி இன்று 16 ஆம் திருவிழா நடைபெறுகின்றது. உற்சவ காலத்தையொட்டி யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்கள் அமைக்கவும் மற்றும் துவிச்சக்கர வண்டி மோட்டார் வண்டி மற்றும் கார் போன்வறவற்றிற்கான பாதுகாப்பு நிலையங்கள் போன்றவற்றை கொடுப்பதில் விலைக் கோரல் ஊடாக பல இலட்சங்களை பார்த்த யாழ். மாநகர முதல்வர் தற்போது யாழில் பிரபல வர்த்தகர்களை தொடர்பு கொண்டு பணம்…
-
நான்கு மாவட்ட வீடமைப்புக்கு நிதி ஒதுக்கீடு!
அம்பாறை -பொலன்னறுவை -திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் சம காலத்திலேயே வீடமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
-
மகாபோதி சங்கத்தில் முதலாவது இப்தார்; சமயப் பெரியார்கள் நல்லிணக்க உரை
இலங்கை வரலாற்றில் மகாபோதி சங்கத்தில் முதன் முறையாக நோன்பு துறக்கும் “இப்தார்” நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடைபெற்றது. பெளத்த – முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த “இப்தார்” நிகழ்வில் பெளத்த பிக்குமார் அநேகரும் முஸ்லிம்கள் உட்பட இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். தேசிய நல்லிணக்க புரிந்துணர்வு மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மகாபோதி மண்டபத்தில் “மஃரிபு” தொழுகைக்கான “அதானை” மெளலவி எஸ். எஸ். எம். முஸ்தபா (பலாஹி) கூறினார்.
-
ஒலிம்பிக் 2012: பலத்த போட்டிகளுக்கிடையில் தொடர்ந்தும் சீனா முதலாமிடம்
Rank Country Total 1 China 36 22 19 77 2 United States 34 22 25 81 3 Great Britain & N. Ireland 22 13 13 48 4 South Korea 12 7 6 25 5 Russian Federation 11 19 22 52