WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • லண்டன் தீ விபத்து! தொடரும் மர்மம்: ஒரே அறையில் 42 சடலங்கள்

    லண்டன்: கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல உண்மைகளை மறைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமான டெய்லிமெய்ல் தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படைப் பிரிவின் மூன்று பேரைக் கைது செய்தது சவுதி

    றியாத்: ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று பேர், சவுதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.வெள்ளிக்கிழமையன்று, சவுதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மர்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் ஈரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

  • மதுபாணத்தை மறுத்த பாகிஸ்தான் அணி

    MJ லண்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவை வரலாற்று ரீதியில் தோற்கடித்து, பாகிஸ்தான் சம்பியனாக முடிசூடிக்கொண்டது. மேற்கத்தேய மற்றும், உயர்தர விளையாட்டுக்களின் சுற்றுப்போட்டிகளின் (சம்பியன்) வெற்றிபெற்றவர்களுக்கு, உயர் தர மிக்க சம்பைன் மதுபானம் வழங்கப்படும். அதனை குளுக்கி, அதன் நுரைகளை சக வீரர்களுக்குத் தெளித்து, வெற்றிக்கிண்ணத்துடன் சம்பைனையும் சுவைப்பது, வெற்றி வீரர்களின் பண்பாடாக இருந்துவரும் நிலையில்,

  • இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த போட்டியை மறக்க முடியாது!

    லண்டன்: 180 ரன்கள் வித்தியாசத்தில் சம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது. இது பல வகைகளிலும் இந்தியாவுக்கு மறக்க முடியாத போட்டியாகும். ஐசிசி போன்ற முக்கிய 50 ஓவர் தொடர்களில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற சகாப்தம் மாறிவிட்டது. இதுவரை நடந்த எந்த ஒரு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே கிடையாது.

  • லண்டன் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல்

    லண்டன்: லண்டனின் வட பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாயலுக்கு அருகில், தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது, வேன் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு தாண்டிய சற்று நேரத்தில், ஃபின்ஸ்பரி பூங்கா அருகில், முஸ்லிம் நலவாழ்வு இல்லத்திற்கு வெளியே, நடை பாதையில் ஏறிய அந்த வேன் மக்கள் மீது மோதியது. 48 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • இன, மத முரண்பாடு உண்டாக்கிய சம்பவங்கள்: இரு முஸ்லிம்கள் உட்பட 14 பேர் கைது

    கொழும்பு: இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை அவர் அறிவித்திருக்கின்றார்.

  • ”யாரையும் எளிதாகக் கருதக் கூடாது”- கோலி

    லண்டன்: பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்கு கிடைத்து வெற்றி இது என்று சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கருத்து தெரிவித்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை,  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது.

  • இந்தியாவை வீழ்த்தி சம்பியனானது பாகிஸ்தான்

    லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

  • எரிந்த லண்டன் கட்டடத்திற்குள் பல சடலங்கள்: பெரும்பாலானோர் முஸ்லிம்கள்

    லண்டன்: மேற்கு லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

  • சாதாரண தரப் பரீட்சையில் நான்கு தடவைகள் தோல்வியடைந்த அமைச்சர்

    அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது பல அமைச்சர்கள் வகித்து வந்த அமைச்சுக்கள் பறிக்கப்பட்டு பதிலுக்கு அவர்களுக்கு வேறு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களின் தகுதிகள்-கல்வித் தகைமைகள் தொடர்பில் மஹிந்த அணி கேள்வி எழுப்பி வருகின்றது.

  • கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு! கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (17-06-2017) பிற்பகல் 05:30 மணிக்கு அபு ஹமூரில் அமைந்துள்ள “லக்பிம க்ராண்ட்” இல் (Lakbima Grand Restaurant) ஏற்பாடாகியுள்ளது. ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம்.

  • லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு

    லண்டன்:  லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 120 121 122 123 124 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar