WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி அழைக்கட்டும் பார்ப்போம்’

    கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுத்தால் அதுபற்றி பரிசீலனை செய்யத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதிலளித்தார்.

  • நாணயத்தாள் அச்சிடும் போது மும்மொழிகளுக்கும் முக்கியத்துவம்!

    எதிர்வரும் காலங்களில் நாணயத்தாள் அச்சிடும் போது மும்மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிதித் திணைக்களம் அறிவித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகளின் போது மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்தில் சிங்கள தமிழ் மொழிகளுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், நாணயத்தாள்களை அச்சிடும் போது இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதில்லை என மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.

  • முஸ்லிம்களை அரசியல் சக்தியாக ஓரணியில் திரட்டியவர் மர்ஹூம் அஷ்ரஃப்

    கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப்பின் 12வது நினைவு தினம் நாளை 16ம் திகதியாகும் ‘நிகழ்கால அரசியல் நில வரங்களை சாணக்கிய மாகவும், சாதுர்யமாகவும் சமாளித்த தனித்துவத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இன்றில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை (1981ல்) ஆரம்பித்து ஐந்தாண்டுகளின் பின்பு அதனை அரசியற் கட்சியாக தேர்தல் ஆணையாளரால் (1986ல்) அங்கீகரிக்கச் செய்து எத்தனையோ அரசியல் சூறாவளிகளை எதிர்நோக்கி, வெகு நிதானமாக சேவைகளை சமூகத்தின்…

  • மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு மாணவிகள் காயம்

    சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக இடம்பெற்ற மோட் டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பாட சாலை மாணவிகள் பலத்த காயங்களுக்குள்ளாகி மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர். இதே சமயம் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஆசிரியர் என இனம் காணப்பட்டுள்ள அப்துல் றசூல் என்பவர் பலத்த காயங்களுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

  • கிழக்கு முதல்வர் பதவியை அரச கூட்டணி முஸ்லிம் கட்சிகள் கோருகின்றன

    இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்(ஏசிஎம்சி) கட்சியைச் சேர்ந்த அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டும் என்று அக்கட்சி பரிந்துரை செய்துள்ளது. அங்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும் கிழக்கில் இன்னும் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்று தெரியாத ஒரு சூழலே நிலவுகிறது. ஆளும் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டு 7 இடங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும்…

  • தமிழ் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை இறுதிநேரத்தில் கைவிடப்பட்டது

    கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7.00 மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் அரசதரப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள காரணத்தினால் சமூகமளிக்க மாட்டார் என்பதால் கைவிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளளார்.

  • இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தில் என்ன இருக்கிறது?

    தயாரிப்பாளர் மாயம்; விபரமும் போலி  எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் தயாரிப்பாளர் தம்மை தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

  • லண்டன் பராலிம்பிக்: லான்ஸ் கோப்ரல் பிரதீப் சஞ்சயவுக்கு ஜனாதிபதி கௌரவம்!

    லண்டனில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லான்ஸ் கோப்ரல் பிரதீப் சஞ்சய தமது குடும்பத்தினர் சகிதம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார். இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பிரிவின் அலுவலக சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவருக்கு ஜனாதிபதி 4.5 மில்லியன் ரூபா பணமும் நிலமும் பரிசளித்தார்.

  • தேர்தல் முடிந்து வாரம் ஒன்று! வெற்றிபெற்ற அரசாங்கம் ஆட்சியமைக்கத் தவிப்பு!

    கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • கிழக்குமாகாணசபைத் தேர்தல் 2012: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெற்றிபெறத் தவறியது ஏன்?

     -Special Report காத்தான்குடியின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றது. குறிப்பாக காத்தான்குடி மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஓர் உறுப்பினர் எனும் கனவும் நனவாகவில்லை! 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் காத்தான்குடியில் 6,809 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தை இவ் இயக்கம் பெற்றிருந்தது. எனினும் இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 5,355 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. ஏறாவூரும்…

  • முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐ.ம.சு.மு. கிழக்கில் ஆட்சியமைக்கும்: அரசாங்கம்

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வார இறுதியில் தீர்மானித்து அறிவிப்பார். அடிப்படையற்ற வதந்திகள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளிலும் அரசாங்கம் அடைந்துள்ள வெற்றியானது இலங்கைக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச எதிரிகளுக்கு வழங்கப்பட்ட பதிலடியாகும். இனி ஆளும் கட்சியை அசைக்க எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல,…

  • மட்டு. மாவட்டத்தில் சுயேட்சைக்குழு – 08க்கு கிடைத்திருக்க வேண்டிய பிரதிநிதித்துவம் எப்படி இல்லாமலானது?

    கடந்த 08ம் திகதி சனிக்கிழமையன்று நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவில் பெரும் மோசடி இடம்பெற்றிருப்பதாக உடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிக்கப்பட்டிருந்த 4000 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மாற்றப்பட்டதாகவும், அதன் மூலம் விருப்பு வாக்குத் தெரிவில் பின்னடைந்து காணப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்டு அவரை முன்னணிக்குக் கொண்டு வந்ததாகவும், இந்த மோசடியின் காரணமாக தமது கட்சிக்கு கிடைத்திருக்க…

←Previous Page
1 … 1,211 1,212 1,213 1,214 1,215 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar