-
இது ஒரு அரசியல் விளையாட்டுப் போட்டி….!
-MJ தேர்தல் நிறைவடைந்து விட்டது. எதிரியாய் மக்களைத் திசை திருப்பிய அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது நோக்கங்களை கச்சிதமாக நிறைவேற்றிய பின்னர் தற்பொழுது ஒன்றிணைந்திருக்கின்றனர்.
-
நபிகள் குறித்த படத்துக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது
இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபியைத் தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிராக நான்காவது நாளாக இன்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 முஸ்லீம் அமைப்புக்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.
-
‘மலரும் இலங்கை ” லண்டனில் புகைப்படக்கண்காட்சி
‘மலரும் இலங்கையில் ” (Bloom In Srilanka) என்ற தொனிப்பொருளில் இலங்கையின் புகைப்படக் கண்காட்சி ஒன்று லண்டன் நகரில் நாளை ஆரம்பாகிறது. நாளை 19ஆம்திகதி காலை 9.30மணி முதல் இரவு 9.30மணி வரை லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெறும் இந்த புகைப்படக்கண்காட்சியை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள்- வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பார்வையிடலாம்.
-
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்! யார் இந்த மஜீத்?
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டhர். இவரே இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட்: மரம் கொடுத்த பழம்!
-MJ கிழக்குமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற சுமார் ஒருவாரத்தின் பின்பு நேற்றைய இலங்கை அரசியல் வட்டாரத்தில் உலாவிய விடயம் கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பாகும். இந்தவகையில் திருகோணமலை சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. என்னதான் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்ற போதிலும், கிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லிம்களின் தனித்துவ செல்வாக்கில் இன்னும் இருப்பதை இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
த.தே.கூ. – காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்துரையாடல் வேறு தினத்திற்கு மாற்றம்
– வீரகேசரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சமகால அரசியல் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை இன்று மாலை 5மணிக்கு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தாஜ் பிளாஸா ஹோட்டலில் சந்திக்க இருந்தது.
-
எதிர்ப்பு ஆர்ப்பாட்ட எதிரொலி: சென்னை அமெரிக்க தூதரக விசா பிரிவு மூடல்
முகம்மது நபியைத் தவறாக சித்தரிப்பதாகக் கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதன் பின்னணியில், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவு இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திங்களும் செவ்வாயும் விசாக்கள் வழங்கப்படமாட்டாது. இவ்விரு நாட்களில் விசா தொடர்பாக விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.
-
10 ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்
அதிக வருமானம் ஈட்டும் பத்து ரயில் நிலையங்களை நவீன மயப்படுத்தி பிரயாணிகளுக்கு சகல வசதிகளையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும். ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.
-
இலங்கையில் கிரிக்கட் உலா! அது ஒரு உலகக்கிண்ண பெருவிழா!
-MJ எதிர்வரும் 18ம் திகதி முதல் இலங்கையில் இடம்பெறவிருக்கும் நான்காவது இருபது 20 உலகக்கிண்ணக்போட்டிகள் மிக விமர்சையாக இலங்கை மக்களையும் உலக கிரிக்கட் இரசிகர்களையும் ஆரத்தளுவிச் செல்லவிருக்கின்றன. இலங்கை கிரிக்கட் வளிர்ச்சிக்கு 1980 களில் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மறைந்த ஜே.ஆர். ஜயவர்த்தனா இலங்கையில் கிரிக்கட் வளர தான்முன்னின்று பாடுபட்டார். இலங்கை அணி உலகில் இந்தளவுக்கு புகழ்பெற்றிருப்பதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்த்தனா வழங்கிய உறுதியான அத்திவாரமும் முக்கியமானதொன்றாக அமையும்.
-
அரசுடன் இணையுமாறு சம்பந்தனுக்கு உயர்மட்டத்திலிருந்து அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை ௭ன்றும் கூறினார். ஜானகி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டார்.
-
கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம்
முதலமைச்சர் யார்? மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு o முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி o நஜீப் ஏ மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம் o அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி o முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல்…
-
முதுகெலும்புள்ள முதலமைச்சரே கிழக்கு மாகாணத்துக்குத் தேவை!
-SHM குறித்த மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரமாகியும் கிழக்கின் முதலமைச்சர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெற்ற அரசாங்கம் ஆட்சியமைக்க முடியாத துரதிஷ்ட நிலையில் இருப்பது, கிழக்கில் தமிழர்களினரதும் முஸ்லிம்களினரதும் செல்வாக்குகள் எந்தளவுக்கு இன்னும் தனது சமூகங்களின் தனிப்பட்ட அரசியலில் செல்வாக்குச் செலுத்திவருகின்றன என்பதை உலகம் இன்று அறிந்து கொண்டுள்ளது.