-
5 நாடுகள் பங்கேற்ற முப்படைகளின் இராணுவ பயிற்சி நேற்று நிறைவு
ஐந்து நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் தொப்பிகல, வாகரை பிரதேசங்களில் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த முப்படைகளின் கூட்டு இராணுவ பயிற்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 39 முப்படை அதிகாரிகளும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 வீரர்களும் இந்த கூட்டுப் பயிற்சிகளில் பங்குபற்றினர்.
-
மல்வானையில் நடந்தது என்ன?
-MJ நேற்று மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
-
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க ஆஸாத் சாலி யார்?
முஸ்லிம் காங்கிரஸில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்தையும் வகிக்காக ஆஸாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரஸையோ அதன் தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாதென அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை மைத்துவம் தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு அசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட் டியிட்ட அசாத் சாலி, முஸ்லிம் காங்கிரஸ்…
-
அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு அடிபணியாது மு. கா தலைவர் எடுத்த முடிவிற்கு வரவேற்பு
கட்சி நலனை விடவும் சமூக நலனுக்கு முன்னுரிமை; புரிந்துணர்வுடனான விட்டுக்கொடுப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு! கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை அந்த இயக்கம் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விட சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டி யுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-
25 வருட காலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு தேசிய மின்சாரம்!
யாழ். தீபகற்பத்துக்கு 25 வருட காலத்துக்குப் பின்னர் தேசிய மின்சாரம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக இன்று தெரிவித்தார். தமது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
-
காத்தான்குடியில் சிறுவர் விளையாட்டு
உலக சிறுவர் தினத்தை (01.10.2012) முன்னிட்டு கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர்நலன்புரி அமைப்பினால் நடாத்தும் காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கிடையில் நடாத்தும் விளையாட்டுப் போட்டி அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. பசீர் தலைமையில் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் (5.10.2012) திகதி பாடசாலை சிறுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
-
சர்வதேசத்தின் கவனத்தை திசைதிருப்பிய கொழும்பு ஆர்ப்பாட்டம்!
-MJ முஸ்லிம்களை அவமதித்து வெளியிடப்பட்ட ‘அப்பாவி முஸ்லிம்கள்’ எனும் திரைப்படத்துக்கு எதிராக நேற்று ஜூம்ஆவின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பிரமாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
-
‘அப்பாவி முஸ்லிம்கள்’ திரைப்படத்துக்கு உலக முஸ்லிம்களின் எதிர்ப்புக்கள் – ஒரே பார்வையில்
‘Sam Bacile’ எனும் யார் எவன் என்ற நாமமில்லாமல் அப்பாவி முஸ்லிம்கள் “The Innocence of Muslims.” எனும் பெயரில் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு உலக திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் இஸ்லாத்தின் இறுதி நபியும் மனிதர்களில் மாணிக்கமும் முஸ்லிம்களின் உயிரிலும் மேலான கண்மணி முகம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் உணர்வுகளையும், கற்பனை கலந்த முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகளையும் புணைத்து திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை எதிர்த்து கடந்த வாரத்திலிருந்து உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் கண்டன…
-
கிழக்கில் ஐந்து வருடங்களுக்கும் நஜீப்பே முதலமைச்சர்!
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரெனவும் எக்காரணம் கொண்டும் பதவி பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அரசின் அதி உயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு, முதல் இரண்டரை வருடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் நஜீப்பும், மீதி இரண்டரை வருடங்களுக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என வெளிவரும் தகவல்கள் இந்த அறிவிப்பையடுத்து முடிவுக்கு வருகின்றன.
-
முஸ்லிம்களை அவமதிக்கும் காணொளியை அமெரிக்க அரசாங்கம் நிராகரிக்கிறது: அமெரிக்க தூதரகம் அறிக்கை
முஸ்லிம் மக்களை அவமதிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் உள்ளடங்கியுள்ள விபரங்களையும் கருத்துக்களையும் அமெரிக்கா ஆணித்தரமாக நிராகரிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காணொளி தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் வெளியிட்ட வாக்கு மூலத்தையே தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்
எந்த ஒரு மதமும், எந்த ஒரு சமயமும், இன்றுவரை தராத பற்பல உரிமைகளையும், கடமைகளையும் 1431 வருடங்களுக்கு முன்பே மனித சமுதாயத்திற்கு வாரி வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். குழந்தை வளர்ப்பாக இருந்தாலும் சரி, திருமணம், பெற்றோரை பேணுதல், அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுதல் இப்படி எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதைப்பற்றிய தெளிவான, சிந்தனையை மக்களுக்கு வழங்குகிறது இஸ்லாம். இந்த இஸ்லாமிய சட்டங்களையும் போதனைகளையும் எடுத்துக்கூறியது மட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் இவற்றை நடைமுறைபடுத்திக்…