WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘ஆண் துணையின்றி புனிதப் பயணம் கூடாது’ நைஜீரியப் பெண் ஹஜ் பயணிகள் சௌதியிலிருந்து வெளியேற்றம்!

    சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.

  • கட்சி இணக்கப்பாடு இருந்தால் முதலமைச்சர் பதவியை பங்குபோடலாம்

    கிழக்கு மாகாகண சபை முதலமைச்சர் பதவியை ஐக்கிய மக்கள் சுதநதிர முன்னணியும் -ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை வருடங்களுக்கு பங்குபோட்டுக்கொள்ள அரசியலமைப்பில் இடமில்லாதபோதும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியமே என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடக அமைச்சில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு…

  • நபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி

    1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைதூதராக நம் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.

  • நுளம்புகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதே ஆபத்தை தடுக்கும் வழி

    டெங்கு காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காயச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு அயன மண்டலத் தொற்று நோய் ஆகும். இது நுளம்புகளால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடுமை காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தொற்று நோய் தீவிரம் அடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப் போக்குக் காய்ச்சல் கடுமையான குருதிப் போக்கை ஏற்படுத்தும். மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறி குறி…

  • முதலாவது ஹஜ் குழுவினர் நேற்று புறப்பட்டனர்

    புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகளின் குழுவின் முதல் விமானம் நேற்று 26ஆம் திகதி புதன்கிழமை இங்கிருந்து புறப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகள் சவுதியா எஸ்.வி. 789 என்ற விமானத்தில் நேற்று புதன்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி சென்றனர்.

  • கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்கள்!

    டயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை -MJ மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார  மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது சார்ள்ஸ்-டயானா இருவரினரது மணவாழ்க்கை பிரிவில் தொடர்ந்து டயானாவின் மரணத்தில் முற்றுப்பெற்றது.

  • ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2012: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள்

    பிரபல பாடசாலைகளில் கற்பதற்குத் தேவையான வெட்டுப்புள்ளிகள்

  • 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்து ஓயா கனிஷ்ட பாடசாலை மாணவி ஆர்.எம்.ஏ.யு. மதுவந்தி ஆகியோர் அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

  • ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

    ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் (2012) இன்று வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்      

  • கொழும்பில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு பாரிய ஆர்ப்பாட்டம்!

    புனித இஸ்லாத்தையும் இறை தூதரையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் நேற்று 24ம் திகதி காலை மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

  • புத்தசாசன- சமய விவகார அமைச்சும் கண்டனம்!

    இஸ்லாத்தை அவமதிக்கும் வீடியோவுக்கு புத்தசாசன சமய விவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய விவகார பதில் அமைச்சர் டபிள்யூ.எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறியதுடன், மத உணர்வுகளை புண்படுத்துவதற்கு எந்த தனிநபருக்கோ ,குழுவுக்கோ அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.

  • ஹுனைஸ் பாரூக் எம்.பி. விபத்தில் காயம்

    புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் 6 பேரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

←Previous Page
1 … 1,208 1,209 1,210 1,211 1,212 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar