-
றிசானா நபீக்கின் மறுமை வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்
– கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் – எப்.எம். பர்ஹான் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய றிசானா நபீக்கின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய சரீஆ சட்டத்தின்படி கொலைக்கு கொலை தண்டனையாக இருந்தபோதிலும் மன்னிப்பளிப்பதை இஸ்லாம் விரும்புகின்றது.
-
மரணித்த றிஸானா நபீக்கின்குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு முன்வந்துள்ள சவுதி தனவந்தர்
பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு/ FM. பர்ஹான் சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச் சென்றாரோ அது நிறைவேற்றப்படவேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் முன்வந்திருப்பதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
-
அரச ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் கிடைப்பதில் குழறுபடிகள்!
– எப்.எம். பர்ஹான் அரச ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் கிடைப்பதில் பல குழறுபடிகள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பை அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்கவேண்டும்
இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும்: உலமா கட்சி – பழுலுல்லாஹ் பர்ஹான் றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பையும் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்பதுடன் இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டுமென உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
-
காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஐ.எம். தையூப் ஜேபி. நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஐ.எம். தையூப் நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார் . காத்தான்குடி கூட்டுறவு பரீசோதகர் உசனார் தலைமையில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற இயக்குனர் சபை கூட்டத்திலேயே எம்.ஐ.எம். தையூப் ஜேபி. சங்கத்தின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
-
அல்மனார் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்வி கலாசார சமூக அபிவிருத்திக்கான அல்மானர் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கீழ் செயற்படும் காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஏதிர்வரும் 18-01-2013 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அல்மனார் அறிவியல் கல்லூரியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி தலைமையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் அல்மனார் அறிவியல் கல்லூரியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
ஒரு தொகுதி வெள்ள நிவாரணப்பொருட்கள் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் கையளிப்பு
– எப்.எம்.பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவந்த அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெள்ள நிவாரணப்பொருட்கள் செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
-
சொர்க்கதுக்கு சொந்தக்காரி றிஸானா..!!
காத்தான்குடி – மதியன்பன் அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்!
-
பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அனுதாப மற்றும் உதவி கோரல் அறிக்கை
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! இஸ்லாம் பிறந்த பூமியிலேயே இன்று மன்னிப்பு எனும் பெருங்கொடையை நாம் இழந்தோம்! சகோதரி ரிசானா நஃபீக்கின் மரணச் செய்தி கேட்டு!!
-
இறைமையுள்ள நாடான சவூதி அரேபியாவின் நீதித்துறைக்கு நாம் மதிப்பளித்து நடந்து கொண்டோம்
– ரிஸானா நபீக்கின் விவகாரம் தொடர்பில் – நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் – பழுலுல்லாஹ் பர்ஹான் ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09.01.2013) நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சிங்களத்தில் விடுத்த அறிக்கையின் தமிழாக்கம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் 2013 ஆம் ஆண்டுக்கு இலங்கை சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதித்துக்கொள்ளும் பிரவேசப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், குடியியல் அமைப்புகள் பல மற்றும் ஓர் அரசியல் கட்சி என்பன ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு, சட்டக்கல்லூரி பிரவேசப் பரீட்சை நடாத்தப்பட்ட விதத்தைப் பற்றியும் இறுதி பெறுபேறுகள் சம்பந்தமாகவும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளன.
-
பாராளுமன்றத்தில் நேற்று 08.01.2013 அன்று மாலை திவிநெகும சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
– பழுலுல்லாஹ் பர்ஹான் எனக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னையும் அரசியலமைப்பு 18 ஆவது திருத்தச் சட்ட விவாதத்தோடு போது சம்பந்தப்படுத்தி திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழில் உரையாற்றியதனால, அவை தொடர்பில் விளக்கமளிக்கும் விதத்தில் நானும் தமிழிலேயே உரையாற்றுவது பொருத்தமெனக் கருதுகிறேன். சமகால மொழிபெயர்ப்பு வழங்கப்படுவதால் கௌரவ அமைச்சரும், உறுப்பினர்கள் அனைவரும் எனது உரையை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.