-
‘விஸ்வரூபம் விரைவில் வெளியாகும்’ : இலங்கை தணிக்கைச் சபை
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.
-
புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், திட்டஅமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்
-பழுளுல்லாஹ் பர்ஹான் அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட புதிய மாற்றத்திற்கமைவாக புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் திட்ட அமைச்சர்கள் 2பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
-
புதிய அமைச்சர்கள் விபரம்: பசீருக்கு உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சு!
புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய அமைச்சர்களது விபரம் வருமாறு:
-
விஸ்வரூபம்: நீதிமன்ற தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு!
விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
-
ஏன் இந்த விஷ்வரூபம்? தணிக்கைக் குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னாவின் விசேட அறிக்கை
விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தி.மு.க. வைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தைப் பார்த்து அதை வெளியிட அனுமதித்த தணிக்கைக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஹசன் முகம்மது ஜின்னா. இவர் திமுகவைச் சேர்ந்தவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர். இந்த…
-
பொதுபல சேனா அமைப்பிடம் விளக்கம் கோரினார் ஜனாதிபதி
நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
இஸ்ரேலிய பிரிமியர் லீக்: முஸ்லிம் வீரர்களை ஒப்பந்தம் செய்ததற்காக இரசிகர்கள் எதிர்ப்பு!
-MJ இஸ்ரேலிய பிரிமியர் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது இஸ்ரேலில் உள்ள முக்கிய அணிகளின் மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன. உலக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஐரோப்பா உதைப்பந்தாட்ட லீக் போட்டிகளைப் போன்று இஸ்ரேலிலும் இச்சுற்றுப்போட்டிகள் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம்.
-
அரச மருத்துவர்கள் சங்க மட்டக்களப்பு கிளைத்; தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் (அ.ம.ச. அறிக்கையின் ஆங்கிலப் பிரதி இணைப்பு) அரச மருத்துவர்கள் சங்க மட்டக்களப்பு கிளைத்; தொழிற்சங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2013-01-29ம் திகதி பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.
-
சன்டா மரியா : இரவு விடுதி தீ விபத்தில் 245 பேர் பலி
பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் பெரும்மாலும் மாணவர்கள் உட்பட குறைந்தபட்சம் 245 பேராவது இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
-
விஸ்வரூபத்திற்கு தடை நீங்குமா?… நீதிபதி நாளை உத்தரவு பிறப்பிக்கிறார்!
கேரளாவில் விஸ்வரூபம் ஓடிய தியேட்டர் மீது கல்வீச்சு! சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் நேற்று பார்வையிட்டனர். நாளை இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது தடையை நீக்கி நீதிபதி உத்தரவிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
சீரற்ற காலநிலையால் மட்டு அம்பாறை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
-
காத்தான்குடி கரையோரங்களில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளன!
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கடலை அண்டிய கரையோரங்களில் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன.