-
ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டும்: ஸ்ரீ. ல.மு.கா. பிரதித் தலைவர் நசீர் அஹமட்
– பழுலுல்லாஹ் பர்ஹான் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
-
இம்முறையும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ அனுசரணை
– பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான சமபோஷ வர்த்தகநாமத்தின் மூலம் அனுசரணை வழங்கப்படுகிறது.
-
முஸ்லிம்களுக்காகப் பேச வேண்டிய தருணத்தில் அவர்களைக் கைவிட்டு விடுகின்ற மற்றுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லிம் காங்கிரஸ் செய்துவிடக் கூடாது!
கிழக்கு மாகாண ஆட்சியில் மு.கா. பங்கேற்பது குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கை- -PMGG கிழக்கு மாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடித்துச் சொல்லியிருப்பதில் இருந்து, ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவு அரசாங்கத்திற்கே கிடைக்கும் என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
-
மாணவியின் சத்திரசிகிச்சைக்காக காத்தான்குடியில் றிஜான் நஸீரின் மாபெரும் அதிசயக் காட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் வழங்கும் ‘சமாதானம் என்றால் என்ன’ ‘ஒற்றுமை என்றால் என்ன’ என்பதை செயன்முறையில் நிகழ்த்திக் காட்டும் மாபெரும் அதிசயக் காட்சி எதிர்வரும் 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
-
அதிகரித்துச் செல்லும் இனவாதம்: எதிர்காலம் என்ன…? போருக்குப் பின்னரான இலங்கை
PMGG போர் முடிவுக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையிலுமான சந்தேகப் பார்வைகள் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் 03 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) ஏற்பாட்டில் கிழக்குப் பிராந்திய ஊழியர் ஒன்று கூடலும் இவ்வருடம் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிறன்று ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான ஐ.எம்.இப்திகார் தலைமையில் நடைபெற்றது.
-
கொரியாவுக்கு கிழக்கிலிருந்து அரசியல் பிரமுகர்கள் குழு விஜயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.அப்துல் மஜீட், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் குழு இன்று (06.03.2013) கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியா பயனமாகவுள்ளனர்.
-
16வது ஆசிர்வதிப்பர் போப்-பெனடிக் அவர்களின் இராஜினாமாவின் பின்உள்ள மர்மங்கள்….
-MJ 16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
-
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது எனவும் தான் அவ்வாறு எந்தவொரு பணிப்பும் வழங்கவில்லை எனவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
-
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்கள் எந்த போட்டியிலும் விளையாட முடியாது!
வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத கிரிக்கெட் வீரர்களை எந்த ஒரு போட்டியிலும் விளையாட அனு மதிக்கப்போவதில்லையென உறுதியாக இருந்ததையடுத்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
-
தீக்குளித்த கடலூர் மணி மரணம்
-F42 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த மணி சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் உயிரிழந்தார்.
-
தமிழ்-முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்திற்காக உழைத்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.அஹமது லெப்பையின் 25வது வருட தினம் இன்று
தொகுப்பு: பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட அரசியல் வாதியும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஆலோசகரும் காத்தான்குடி பட்டின ஆட்சி மன்ற சபைத் தலைவருமான மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.அஹமது லெப்பை அவர்களது 25வது ஆண்டு பூர்த்தி எதிர்வரும் 06.03.2013 புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது.