-
ரிஷாட், ரியாஜ் பதியுதீன் 90 நாள் தடுப்புக் காவலில்
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ பதியுதீன் ஆகியோரை இன்று முதல் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் அனுமதியை பெற்றுள்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 வரை பூட்டு
கொழும்பு: நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து மேல் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.
-
மொட்டு அரசின் பீத்தலை மறைக்கும் எத்தனமாகவே ரிஷாத் பதியுதீன் பாவிக்கப்படுகின்றார்
மாளிகைக்காடு நிருபர் நாட்டிலே அண்மைக்காலமாக மொட்டு அரசு உட்கட்சி மோதல்களின் உக்கிரத்தினால் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. அதனை சமப்படுத்தும் நோக்கத்துக்காகவே தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
-
ஸஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் TIDயினால் கைது
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான ஸஹ்ரான் ஹாசிமினால், மேற்கொள்ளப்பட்ட கடும்போக்குவாதம் தொடர்பான வகுப்புகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 3 சந்தேகநபர்களை, TID யினர் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஜமாஅத்தே இஸ்லாமி இல்லை. ஆனால் தலைவர் ‘பயங்கரவாதி’? இது ஏன்?
பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இது சம்பந்தமாக எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உடனடியாக வாய் திறக்கவில்லை.
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியலா ? மத தீவிரவாதமா ? பேராயரின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிமகள்
2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.
-
முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரத்தினை எவ்வாறு கட்டுப்படுத்துவது ? பிரபாகரனின் இறுதிவரைக்குமான உரை??
தங்களது கொள்கையின் அடிப்படையில் மக்கள் மத்தியில் உண்மையை கூறி பிரச்சாரம் செய்கின்ற சில அரசியல் கட்சிகள் உள்ளன. அதுபோல் எந்தவித கொள்கைகளும் இல்லாமல் எப்படியாவது தேர்தலை வென்றால் மட்டும் போதும் என்ற இலாபத்தினை நோக்கமாகக் கொண்ட கட்சிகளும் உள்ளன.
-
சிலரின் சுயநலனுக்கான காட்டிக்கொடுப்புக்கள்
பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சட்டத்திற்கு முரணாக யாராவது செயல்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.
-
சஹ்ரான் குழு தொடர்பில் எதை நம்புவது? தலைவரின் கருத்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்றதா??
சஹ்ரான் ஹாசிமின் குழுவினர் 2019 இல் நடாத்திய உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை பற்றி அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முறனானதாகவே உள்ளது. இதனால் எதனை நம்புவது என்ற குழப்பத்தில் மக்கள் இருந்துவருகின்றனர்.
-
பாரிய இடி மின்னலுடனான மழைக்கு வாய்ப்பு!
கொழும்பு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார்
லண்டன்: பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. 1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர். அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற…
-
நவ்பர் மௌலவியை கைது செய்து சிறையில் அடைத்தது கோட்டா அரசு அல்ல: ஹக்கீம் கொண்டு வந்த நல்லாட்சியே – உலமா கட்சி
– நூருல் ஹுதா உமர் கொழும்பு: ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்றும் இதன் பின்னால் இஸ்ரேல் உளவுப்படை இருந்ததா என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது கேட்பதன் மூலம் இவரும் அமைச்சராக இருந்த அரசாங்கத்திடம் இதனை கேட்காமல் கோழையாக தூங்கிக்கொண்டிருந்தாரா என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது