புரிந்தவர்களுக்கு மட்டும்…

  • உசேன்

muslim wonenவெசாக்கூடுகள் ஏற்றினோம்
ஏழைகளைப் புறக்கணித்து நல்லிணக்க இப்தார் கொடுத்தோம்
பள்ளிவாயலுக்குள் புகுந்து சுட்டவனுக்கு பொன்னாடை போர்த்தினோம்
காமதுரு மரணத்திற்கு அருகில் இருந்து பிராத்தித்தோம்
மலர்தட்டு கைகொண்டு மகிழ்ந்தோம்
மார்க்க எதிர்த்தரப்பையும்
வியாபாரத்தில் போட்டிக்காரனையும்
தனக்குப்பிடிக்காதோரையும் காட்டிக்கொடுத்தோம்
பத்திரிகையாளர் மாநாடு போட்டோம்
காசுகொடுத்து சிங்கள செய்தித்தாள்களுக்கும் செய்திகள் அனுப்பினோம்
மொத்தத்தில் நாங்கள் மட்டும் வாழ வேண்டும் என நினைத்தீர்கள்
நீங்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்றனர் அவர்கள்

Published by

Leave a comment