-
இர்ஷாட் ஏ. காதர்YKK
காத்தான்குடி: வஹாபிஸம் இலங்கையில் இருப்பதால்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் நிலைகொண்டுவருகிறது எனும் அடிப்படையில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக அந்நிய ஊடகங்களுக்கு சளைக்காமல் பேட்டிகொடுத்துவந்த முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸாட் சாலியின் நிலை இன்று கவலைக்கிடமாக இருப்பது ஆச்சரியமானதே!
இலங்கை முஸ்லிம்களுக்கு அவ்வப்போது பேரினவாதிகளாலும், தழிழர்களாலும் நெருக்கடிகள் வரும்போதெல்லாம், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் காத்திருக்கும் நேரத்தில் தைரியமாக முஸ்லிம்களுக்குக் குரல்கொடுக்கும் ஓர் மனித நேயம்மிக்கவரும் இந்த அஸாட் சாலிதான் என்பதை திட்டமாகக் கூறிக்கொள்கிறேன்.
இருந்தும், அச்சத்தாலும், சுகபோகங்களாலும் தங்களை மறந்து, பௌத்த ஆலய வழிபாடுகளுக்கும், வெசாக்கூடுகளுக்கும், அன்னதானங்களுக்கும் தங்களை அர்ப்பணித்து ஈமானை இழக்கும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை உறுப்பினர்களால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பைப் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போய் உள்ளதை இன்று இலங்கை முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்.
இன ஐக்கிய நோன்பு திறப்பு-இப்தார் ஒருபோதும் இன நல்லுறவை பேணாது. இன நல்லுறவு இப்தார் போல், நம் இஸ்லாமியத் தலைவர்கள் இன நல்லுறவு திருமணம் ஏற்பாடு செய்தாலும்கூட இன நல்லுறவு இலங்கையில் ஏற்படாது.
அல்லாஹ் ஒருவனே எங்களுக்கான பாதுகாவலன்.
பிரமாண்டமான திட்டங்களுடன் காய்நகர்த்தப்படும் அரசியல் பின்னணியில் அஸாட் சாலி, ஹிஸ்புல்லாஹ் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்திருப்பது சொந்த விருப்பிலா…? அல்லது எதிர்கால அரசியல் நலனுக்கான பேராவலா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். பாவம் பாமரர்கள்….
இலங்கையில் திடல் தொழுகை என்பது நீங்கள் குறிப்பிடும் வஹாபிகள் வருவதற்கு முன்னரே ஆரம்பமானது கொழும்பில் இருக்கும் உங்களுக்கும், அஇஜ.உலமாவுக்கும் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.
பல தசாப்தங்களாக காலி முகத்திடலில் மேமன் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் பிரமாண்டமான பெருநாள் திடல் தொழுகை வஹாபிகளால் ஆரம்பிக்கப்பட்டதா….?
இத்திடல் ஹூப்புக்களும், சுன்னிகளும், தப்லீஹீன்களும் தொழும் திடலாகவே இருக்கின்றது.
இதைக்கூட அறியாத நீங்கள் வஹாபி திடலை இட்டுக்கட்டடுவது வேடிக்கை.
நீங்கள் வஹாபியைக் காட்டிக்கொடுத்தாலும் சரிதான், வெசாக்கூடு கட்டினாலும் சரிதான், இன நல்லுறவு இப்தார் அல்லது இன நல்லுறவு திருமணம் நடத்தினாலும், பௌத்த மதத்தை ஏற்கும் வரைக்கும் நீங்குளும், நாங்களும் “தம்பிலா” தான் என்பதை மறக்க வேண்டாம்.
ஆட்சியமைப்பதற்கும் வஹாகியும் தேவை, சுன்னியும் தேவை என்பதையும் மறக்க வேண்டாம்!
என்றும் அன்புடன்
யுவர்காத்தான்குடிக்காக
இர்ஷாட் ஏ. காதர் YKK—–