உலகின் பெரும்பாலான பகுதிகளில் சங்கைமிக்க ரமழான் ஆரம்பமாகிவிட்டது. நல்லமல்களின் பக்கம் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் ரமழான் பிறை தென்படவில்லை. அப்பிரதேசங்களிலும் ரமழானை வரவேற்க அதிக ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். அல் குர்ஆன் இறக்கப்பட்ட இந்த மாதம் ஓர் சங்கைமிக்க மாதமாகும்.
அடுத்தவன் ‘பலாய்’ கழுவுதல், சந்தேகக்கண்ணோடு மற்றவர்களை நோக்குதல், பாவகாரியங்களில் ஈடுபடுதல் தவிர்த்து இறைவனுக்கு மாத்திரமே நோன்பு நோற்கும் அடியானாக நாங்கள் செயற்பட வேண்டும்.
நோன்பை ‘அதாபு’ படுத்தாமல் நோன்புக்குரிய கண்ணியத்தில் நோன்பாளிகள் இருத்தல் அவசியம். நோன்பைப் பிடித்துக்கொண்டு விளையாடுதல், உடல்பயிற்சியில் ஈடுபடுதல் கடின உழைப்பு போன்றவை நோன்பின் அமல்களை சற்று தளர்த்தும். வருடத்தில் ஒரு முறை எம்மை வந்தடையும் ரமழானை வரவேற்க நாங்களே தயாராக வேண்டும்! ரமழான் வந்து, போய்விடும்!!
yourkattankudy/ramadan
அல்குர்ஆன் ஓதப்படும் அற்புத மாதம். இரவு வணக்கங்களில் ஈடுபடுவது படைத்தவனை மேலும் நெருங்க எங்களுக்கு வழிவகுக்கும்.
காஸா போர் ஆரம்பமாகும். ஆங்காங்கே முஸ்லிம்கள் தாக்கப்படுவார்கள்.
இலங்கையில் பேரினவாதம் தலை தூக்கும். அச்சமும் குழப்பமும் அவ்வப்போது ஏற்படும்.