காத்தான்குடி: கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் காசிம் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்கொலை குண்டுதாரியும் ஐ.எஸ். இயக்கத்தின் இலங்கைக்கான ‘தூதுவரு’மான சஹ்ரான் காசிமிடம் இரு குழுக்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘மார்க்கப் பிரிவு’ மற்றும் ‘அரசியல் பிரிவு’ என இரு குழுக்கள் இருந்ததாகவும், இதில் தற்கொலைத் தாக்குதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரியவருகிறது.
ஓர் போராட்டம் எனும்போது தாங்கள் தங்களது மார்க்கத்துக்காக போராடி மடிவதே இஸ்லாம் அனுமதித்த போராட்டம் எனவும், பொதுமக்களைக் கொண்டு தாங்களும் தற்கொலை செய்வது என்பது இஸ்லாத்தில் இல்லை எனவும் இவ்விரு குழுக்களில் இருந்தவர்களும் சஹ்ரானிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்விரு குழுக்களும் ஒன்றாக இணைந்து சந்தித்த குறித்த இடத்தில் அதாவது 21 ஏப்ரல் 2019 திகதிக்கு முன்னர் சில வாய்த்தர்க்கங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சஹ்ரானால் திட்டமிடப்பட்ட பல இடங்கள் தாக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே சஹ்ரான் முன்னின்று தாக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இல்லையெனில் இலங்கை பாரிய அழிவை 21ம் திகதி சந்தித்திருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கிடையில் ஆண் குண்டுதாரிகள் கொல்லப்படுவதை எதிர்பார்த்த குண்டுதாரி ஒருவரின் மனைவி, ஏற்கனவே வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ததாகவும், தனக்கும் இவை தேவைப்படும் என மற்றொரு குண்டுதாரியின் மனைவியிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனவரை இழந்த பெண் ‘இத்தா’ இருக்க வேண்டும். இதனாலேயே இப்பெண் வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்திருக்கிறார்.
இதனைப் பார்க்கும்போது பெண்களை குண்டுதாரிகளாக பயன்படுத்த வேண்டும் என்பதை இத்தீவிரவாதிகள் நினைக்கவில்லை. இதனால்தான் தன் கனவரின் மரணிக்க இருக்கும் செய்தியறிந்த அந்த மனைவி வெள்ளை ஆடைகளைக் கொள்வனவு செய்திருக்கிறார்.
இறுதியாக சம்மாந்துறையில், ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பது போல சந்தர்ப்பம் ஏற்படவே ஆண் தீவிரவாதிகளால் பலவந்தமாக பெண்களும், குழந்தைகளும் குண்டுவெடிப்புக்கு பலியாகி இருக்கின்றனர்.
yourkattankudy/zahran-cassim-matter
‘தற்கொலைக்கு விருப்பமில்லாத’ நியாஸ் துப்பாக்கியை கையிலேந்தி சரணடைய வாய்ப்பிருந்தும் ‘சுவர்க்கம் போக’ ஆசைப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடந்த மடத்தனமும் இப்போது வெளியில் கசிகிறது.
இவ்விடயத்தில் நாள் தோரும் பற்பல விடயங்கள் வெளியாகி வருகின்றன. இதன் வெளிப்படைத் தன்மையை அல்லாஹ் அறிந்தவன்.
தப்பிப்பிழைத்த சஹ்ரானின் மனைவி மற்றும் கைதாகியுள்ள சஹ்ரானின் நெருங்கிய உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தாக்குதலின் பின்னணி தெரிந்திருக்கும்.
வெளிநாட்டு சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பின்னணியுடன் தாக்குதல் நடத்திய இக்குழுவிற்கு இன்னும் தொடர்புகள் இருக்கலாம்.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 4ம் திகதி கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தைத் தாக்குவதற்கு சஹ்ரான் திட்டமிட்டிருந்தவேளை அத்தாக்குதல் இடம்பெறாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் தொடர்கின்றன.
சஹ்ரானை ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைத்த அந்த நபர் யார்? விடை தெரியாத இக்கேள்விக்கான பதிலும் விரைவில் வெளிவரலாம். AK-11