-
AF-80
காத்தான்குடி: உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் இற்குப் பின்னால் மேற்கத்தேய நாடுகளின் திட்டமிடல்கள் இருக்கின்றன என்பது உலகமறிந்த விடயம். ஆங்கில மொழியில் அமைந்த இவ் இயக்கத்தின் முழுப் பெயரைச் சுருக்கி ஐ.எஸ் என இப்போது அழைக்கப்படுகிறது. கடந்த மாதத்துடன் இவ்வியக்கம் சிரியாவில் அழிக்கப்பட்டு, அதன் எச்சசொச்சங்கள் அடித்துவிரட்டப்படு வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ரமழான் மாதத்திற்கு முன்பிலிருந்து இவ்வியக்கம் ஈராக்கிலும், சிரியாவிலும் முஸ்லிம்களை வேட்டையாடி வந்தது.
முஸ்லிம்களை மாற்று சக்திகள் அழிப்பதைவிட முஸ்லிம்களிலேயே ஒர் அமைப்பை உருவாக்கி முஸ்லிம்களையே அழிக்கும் மேற்கத்தேய நாடுகளின் ஓர் அபாரத் திட்டத்தின் வெளிப்பாடுதான் இந்த ஐ.எஸ்.
மூளைச் சலவை செய்யப்பட்டு இவ்வமைப்பில் இணைந்த ஐரோப்பிய, அமெரிக்க கண்ணிப் பெண்கள் இன்று சிரியாவின் அகதி முகாம்களில் விதவைகளாக தஞ்சமடைந்திருக்கின்றனர். பலர் மரணித்துவிட்டனர்.
போர்க்களத்தில் கைதான எதிரிக்கும் மன்னிப்பளிக்கும் அற்புதமான இஸ்லாம் மார்கத்தை, மன்னிப்பே இல்லாத மார்க்கமாக உலகுக்கு பறைசாட்டிய கொடுமை இந்த ஐ.எஸ். அமைப்பையே சேரும்.
‘யார் இந்த அப்துல்லாஹ் பக்தாதி‘ எனும் கட்டுரை ஐ.எஸ். ஆரம்பமான காலத்தில் 2014 இல் எம்மால் எழுதப்பட்டது. எமது இளைஞர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என எழுதியிருந்தோம். அதற்கும் அப்போது எமக்கு எதிர்ப்புக்கள் வந்தன.
yourkattankudy/terroist-is-link ஐ.எஸ் இல் இணைந்த பல ஆயிரம் பேர் சுடுகாட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில், மூளைச்சலவை செய்யப்பட்ட அற்ப சொற்ப நபர்களால் இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் தொடர்கின்றன.
எதிலும் தீவிரமாக தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற என்னம் கொண்ட காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட முகமட் சஹ்ரான் காசிம், சிறந்த பேச்சாற்றல்மிக்கவர். 2000 ஆண்டு காலங்களின் பின்னர் இலங்கை தௌஹீத் அமைப்புக்களில் ஈடுபட்டவர். தாருள் அதர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், பின்னர் 2017 வரை தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகராக செயற்பட்டார். பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்தும் 2017 இல் வெளியேற்றப்பட்டார்.
2017 இல் காத்தான்குடி அலியார் சந்தியில் மௌலவி அப்துர் ரஊப் ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட கைகலப்பின் பின்னர் கச்சிதமாக தலைமறைவானார்.
இதன்பின்னர் தனது முகநூல் பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் காணொளிகளை பதிவிட்டு வந்ததுடன், அதற்கான தமிழ்மொழி பிரச்சாரகராக செயற்பட்டார்.
yourkattankudy/terroist-is-link சுமார் 2 வருடங்களாக முகநூலில் ஐ.எஸ் பதிவுகளை மேற்கொண்டுவந்த சஹ்ரான் காசிமின் செயற்பாடுகளுக்கு “லைக்” கொடுப்பவர்களும், “மாஷாஅல்லாஹ்” என்று கொமண்ட் செய்வதவர்களும் சஹ்ரானுக்கு மென்மேலும் புத்துணர்ச்சியை வழங்கினர். இதன்மூலம் அவர் இலங்கையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்பலத்தை பெற்றிருக்கலாம் என சந்தேகம் தோன்றுகிறது.
மூகநூல் மூலமாக பகிரங்கமாக தீவிரவாதத்தை விளைத்துவந்த சஹ்ரானை நேற்றுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இவர் எங்கு இருக்கிறார்?
எங்கிருந்து எந்த வலையமைப்பில் முகநூலை இயக்குகிறார்?
எந்த இணையத்தள “நெட்கார்ட் “அல்லது “வைஃபை” உபயோகிக்கிறார்?
இவரது “ஐ.பி.” முகவரி என்ன?
எந்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் இவரது தொடர்பாடல்கள் கடந்து செல்கின்றன?
போன்ற விபரங்களை இலங்கை பொலிஸார் தொடக்கம் புலனாய்வுப்பிரிவு வரை கடந்த இரு வருடங்கள் கண்டுபிடிக்கப்படாமல் சென்றது எம் அனைவர்களதும் தவறே?
குண்டுகள் வெடிக்கப்பட்ட ஓர் மணித்தியாலங்களுக்குள் இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தாங்கள் அறிந்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் சஹ்ரானின் இறுதி காணொளியில் ‘இலங்கையில் பாரிய தாக்குதல்கள் இடம்பெறும். முஸ்லிம் இல்லாதவர்கள் கொல்லப்படல் வேண்டும். விகாரைகள் அழிக்கப்படும்‘ என சூழுரைக்கிறார். இருந்தும் 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் இடம்பெற்றிருந்தன.
ஆனால் அவரது காணொளியில் தேவாலயங்கள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
அப்படியானால் விகாரைகள் என்று அவர் பொய் கூறினாரா? அல்லது விகாரைகள் தீவிரவாதிகளால் இன்னும் தாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறதா? அல்லது “விகாரைகளை விட்டுவிட்டு தேவாலயங்களைத் தாக்குங்கள்” என “ஓடர்” வந்ததா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.
ஏனெனில் ஐ.எஸ். இயக்கம் ஈராக், சிரியாவில் முஸ்லிம்களைக் கொல்லுதல், ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் குறிவைத்து தங்களுக்கு ஏவப்படும் கட்டளைகளுக்கு அமைவாக இடைக்கிடையே சில குண்டுகளை வெடிக்க வைத்து இஸ்லாமிய எதிர்ப்பை சம்பாதித்தல் நடவடிக்கைகளே பிரதான திட்டங்களாகும்.
குண்டுவெடித்து சில நிமிடங்களில் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் காசிம் என இந்திய செய்தி ஊடகங்கள் தெட்டத்தெளிவாக செய்தி வெளியிட்டன. இத்தாக்குதலில் சர்வதேச தொடர்புகள் இருப்பதாக இந்தியா மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தாக்குதல் இடம்பெற்று சுமார் 55 மணித்தியாலங்களின் பின்னர் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரி இருக்கிறது. தாக்குதல் உரிமைகள் சுமார் 3 மணித்தியாலங்களுக்குள் கோரப்படுவதே தீவிரவாத அமைப்புக்களின் வரலாராகும்.
இலங்கை அரசாங்கம் தாக்குதல் தொடர்பானவர்களைக் கைதுசெய்து வருகின்றனர். விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வதந்திகளும், பதட்டமும் பரவாமலிருக்க சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் அரசாங்கம் எடுத்திருக்கும் இம்முயற்சிகள் அனைத்தும் பாதுகாப்பானதும், அத்தியவசியமானதுமாகும்.இலங்கை மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தீவிரவாதிகளைக் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் வெட்கப்படவேண்டிய ஓர் வரலாற்றுச் சம்பவமாக ஏப்ரல் 21ம் திகதி பதிவாகும்.
இனிமேல் நீ தௌஹீதா? சுன்னியா? காதிரியா? தப்லீக் ஜமாஅத்தா என எதிரிகள் எம்மை நோக்கமாட்டார்கள். முஸ்லிம் என்றால் தாக்க நினைக்கும் எதிரி தாக்கவே செய்வான். அவனுக்கு தொஹீதும் தெரியாது, தப்லீக்கும் தெரியாது.
நாங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தால்தான் தீவிரவாதத்தை ஒழித்தொழிக்க முடியும்.
இலங்கைத் தாக்குதலுக்குத் தயாரான நிலையிலுள்ள புகைப்படமொன்றில் 8 தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களுகளுள் 7 பேர்களால் 7 தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒருவர் மீத மிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுகின்றன.
yourkattankudy/terroist-is-lin
IS. பார்வையில் ஐ.எஸ் இயக்கம் தவிர்ந்த அனைவரும் காபிர்களே! ஐ.எஸ். பார்வையில் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே!
அதனால்தான் “தங்களைக் காட்டிக் கொடுப்பவர்களும் துரோகிகளே” என சஹ்ரானின் காணொளி கூறுகிறது.AF80