“அவர் வரமாட்டார்”

  • இர்ஷாட் ஏ. காதர்

rauff moulaviகாத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி A.J. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி), கடந்த வாரம் காணொளி மூலமாக தனது எல்லாம் அவனே கொள்ளையைச் சரிகாண்பதற்கு உலமாக்களை பொதுவாக அழைத்திருந்தார். 1979 இல் இருந்து இன்றுவரை சுமார் 40 வருடங்களாக காத்தான்குடியில் எல்லாம் அவனே எனும் கொள்கையை நிலைநாட்டி இன்றுவரை பகிரங்கமாக மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி செயற்படுத்தியும் வருகின்றார்.

கடந்த 40 வருடங்களுள் இரு முறை தான் இத்தவறிலிருந்து மீண்டுகொள்வதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளமை தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

1980 ஆரம்ப காலங்களில் காத்தான்குடி மௌலானா கபுறடியில் தனது கொள்கைப் பிரச்சாரக் கூட்டங்களை நடாத்திவந்தார். அன்றும் அவர் உலமாக்களை விவாதிப்பதற்கு அழைத்திருந்தார். அன்றைய உலமாக்கள் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹியின் அழைப்பிற்கு ஆரோக்கியமான பதில்களை வழங்காமையினால் சிறியளவில் இருந்துவந்த அவரது இக்கொள்கைப் பிரச்சாரம் பின்னர் விரிவடைந்து வந்தது.

பின்னர் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹியின் கொள்கைப் பிரச்சாரங்களிலும், பதுரிய்யாத் தைக்காவிலும் ஒலிபெருக்கி உபயோகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததால் 1989வரை கொள்கைப் பிரச்சாரம் பத்ரிய்யாவுக்குள் முடக்கப்பட்டு வந்தது.

இதன் பின்னர் 1989 இல் மர்ஹூம் ரிஸ்வி சின்னலெவ்வையுடன் அரசியல் ஆதரவில் இணைந்த மௌலவி அப்துர் ரஊப் தரப்பிற்கு ஒலி பெருக்கித்தடை தளர்த்தப்பட்டது.

இதன்பின்னர் 1991-94 காலப்பகுதியில் காத்தான்குடியின் மூலை முடுக்குகளில் அப்துர் ரஊப் மௌலவியின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

rauff moulavi
மௌலவி A.J. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி)

2006 இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலுடன் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் வெளிப்படையான கொள்கைப் பிரச்சாரம் கட்டுப்பாடின்றி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன் பின்னர் காத்தான்குடி தௌஹீத் இயங்கங்களால் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கு பகிரங்க விவாத அழைப்புக்களும், கலந்துரையாடலுக்கான அழைப்புக்களும் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றுக்கெல்லாம் எவ்வித ஆரோக்கியமான பதில்களையும் மௌலவி தரப்பு வழங்கவில்லை.

தனது கருத்து நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக அப்துர் ரஊப் மௌலவியால் தற்போது அழைத்திருக்கும் காணொளி மூலமான அழைப்பிற்கு காத்தான்குடி ‘இஸ்லாமிக் சென்ரர்’ முதன் முதலில் ஊடகவியலாளர் மாநாட்டில் அப்துர் ரஊப் மௌலவியின் இவ்வழைப்பிற்குரிய பதிலை வழங்கி இருக்கிறது. காத்தான்குடிக்கு வெளியில் முதன் முதலாக ‘சிலோன் தௌஹீத் ஜமாஅத்’ பதில் வழங்கி இருக்கிறது,

மூடிய அறைக்குள் அவ்வப்போதும் நிகழும் ஒப்பந்தங்களில் அப்துர் ரஊப் மௌலவி கையெழுத்திடுவாரே தவிர, ஒரு போதும் தனது கொள்கை பற்றிய கலந்துரையாடலுக்கோ, விவாதத்திற்கோ செல்லமாட்டார் என்பது மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹியின் கடந்த 40 வருடகாலத்தின் சான்றாகும்.

மாறாக அவர் சென்றால் அது சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஓர் நிகழ்வாக அமையும்!

  • யுவர்காத்தான்குடிக்காக
    இர்ஷாட் ஏ. காதர்

One thought on ““அவர் வரமாட்டார்””

  1. ஊடகவியலாளர் மாநாடு நடாத்தியது இஸ்லாமிக் சென்டர் அல்ல காத்தான்குடி தௌஹீத் கூட்டமைப்பே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s