whatsappநிவ்யோர்க்: உங்கள் நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து உங்களின் வாட்ஸ் ஆப் சட்களை பாதுகாக்க விரும்பும் நபர்களுக்காகவே வட்ஸ் ஆப் நிறுவனம் இந்த பிங்கர்பிரிண்ட் லொக் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த 2.19.3 அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் வாட்ஸ் ஆப் அப்டேட்டில் பயனர்கள் தங்களின் தொடர்புகளுக்கு ஆடியோ அனுப்புவதற்கு முன்பு ஆடியோ பைல்களை பிளே செய்து கேட்டுக்கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் படுத்த உள்ளது. கூடுதலாக, உங்கள் தொலைப்பேசியில் உள்ள அனைத்து ஆடியோ பைல்களும் பயன்பாட்டில் பட்டியலிடப்படும். இந்தச் சேவை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன் 2.19.1 இல் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 ஆடியோ பைல்கள் அனுப்ப முடியும் என்பது கூடுதல் செய்தி.

whatsapp

புதிய ஸ்டிக்கர்ஸ் ஒருங்கிணைப்பு அம்சம் பயனர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் சாட்களில் ஸ்டிக்கர்களைப் பகிர மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பயன்படுத்த இந்த அம்சம் அனுமதிக்கிறது. முதல் முறையாக புதிய ஜிபோர்டு (GBoard) சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், பயனர்கள் ஸ்டிக்கர் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அனுமதியை வழங்குகிறது.

ஐபோன் பயனர்களுக்கான இந்த அம்சம் விரைவில் ஐபோனில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3டி டச் மூலம் ஸ்டேட்டஸ்களின் நிலைமையைச் பார்த்துக் கொள்ளலாம். தற்போது, இந்த அம்சம் ஐபோன் வாட்ஸ் ஆப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது, இப்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. குரூப் சாட்டிங் இல் தனிப்பட்ட நபருக்கு இந்த முறையில் ரிப்ளை அனுப்ப முடியும்.