இலங்கை கிரிக்கெட் குழுவில் விளையாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். இதேவேளை தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்த சந்தர்ப்பம் தொடர்பில் தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் கடந்த புதன்கிழமை (16) முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன்தினம் வியாழக்கிழமை (17) சமூக வலைத்தளங்களுக்கூடாக வழங்கிய நேரடி செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
yourkattankudy/srilanka-cricket
மேலும் இச்சம்பவம் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்று வரும் ஊழலை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படால் 03 மாதத்திலிருந்து 05 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் 05 இலட்சம் முதல் 05 மில்லியன் வரையான தண்டப்பணமும் அறவிடப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இலங்கை கிரிக்கட் சபையில் இடம்பெற்று வரும் ஊழல் தொடர்பில் தகவல்களை முன்வைக்குமாறு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவு வழங்கியுள்ள கால அவகாசம் வெற்றியளித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.