முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்

media forem logo– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது அகவையில் ஊடகத்துக்கு பங்களிப்புச் செய்த 9 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். கொழும்பு – 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு (21) சனிக்கிழமை போரத் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கௌரவிக்கப்படும் ஊடகவியலாளர்கள் முறையே… முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் முன்னேற்றதுக்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ. எல்.எம். இப்றாஹிம், உளவள ஆலோசகரும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் போது சிங்களத்திலே தெளிவான பதில்களை வழங்கிய வழங்கி வரும் சகோதரர் தஹ்லான் மன்சூரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக அரும்பணி புரிந்த புரிந்துவரும் அல் – இஸ்லாம் ஸ்தாபக ஆசிரியர் ஹம்ஸா ஹனீபா, தயா லங்கா புர, (சிரேஷ்ட ஊடகவியலாளர் தகவல் திணைக்களம்), எம். இஷட் அஹ்மத் முனவ்வர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர்), கலாநிதி ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம் சஞ்சிகை), திருமதி ஸக்கியா சித்தீக் பரீத் (ஆசிரியர் பீடம் நவமணி), மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்) எம். ஐ. சம்சுதீன் (பிராந்திய ஊடகவியலாளர்) ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s