“இஸ்ரேல் இனி யூத தேசம்” – மசோதா நிறைவு

israelடெல் அவிவ்: இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம்.இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது.

இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார்.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார்.

இந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது.

“வரலாற்று ரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி. சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன” என்றும் கூறியுள்ளது.

எட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.

ஆனால், இந்த மசோதாவில் உள்ள சில உட்பிரிவுகளுக்கு இஸ்ரேலிய அதிபர் மற்றும் அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை கைவிடப்பட்டன.

இஸ்ரேலின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் அரேபியர்கள். அதாவது 9 மில்லியன் பேர்.

சட்டப்படி அவர்களுக்கு சம உரிமை இருந்தாலும், இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாகவும், இன பாகுபாடுகளை தாங்கள் எதிர்க்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த மசோதாவினை ஜனநாயகத்தின் மரணம் என்று வர்ணிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமத் திபி. இவர் அரேபியர்.

கடந்த வாரம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் பேசுகையில், “மக்கள் உரிமைகளை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்துவோம். ஆனால், அதே நேரம் பெரும்பான்மையானவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களே முடிவு செய்வார்கள்.” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s