அன்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களுக்கு..

foodஅஸ்ஸலாமு அலைக்கும்

சங்கைமிக்க ரமழானின் இறுதிப் பத்தில் நாம் இருக்கிறோம். லைலத்துல் கத்ர் இரவை அடைகிறோமோ இல்லையோ பெருநாளை சந்தோசமாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆவலில் மக்கள் வெள்ளம் மெயின் வீதியிலும் தையல்காரர்களிடமும் தங்களை அர்ப்பணித்திருக்கிறது.

காத்தான்குடி வர்ணஜால முத்துக்கள் போல பார்ப்பவர் கண்களை ஈர்க்கின்றன.

இருந்த போதிலும் காத்தான்குடியில் 70 சத வீதமான வீடுகளில் பெருநாளை அனைவரும் புத்தாடைகளுடனும், சுவையான உணவுகளுடனும் கொண்டாட முடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

‘கௌரவ வறுமை’ பலரை வாட்டுகிறது. ஒரு வேளை உண்டால் மறுவேளை உண்ண முடியாத சூழ் நிலை பல குடும்பங்களில் நிலவுகிறது.

தாய்க்கு உடுப்பெடுத்தால் தந்தைக்கு எடுக்க முடியாது. மகனுக்கு உடுப்பெடுத்தால் மகளுக்கு வாங்க முடியாது.

நகையை அடகுவைத்து புத்தாடை வாங்கும் நிலைமை ஒவ்வொரு வங்கிகளிலும் தெரிகிறது.

பத்தாயிரம் ரூபாய்க்கு உடுப்பு வாங்கினால் மூவாயிரம் காசைக் கொடுத்திட்டு மீதி ஏழாயிரம் ரூபாய் கடனில் முடிகிறது. இதனை காத்தான்குடியின் கடைகளின் கணக்குப் புத்தகங்களிலும் தெரிகிறது.

food

நோன்பு திறக்க சிற்றுண்டி இல்லாமல் தவிக்குது பல ஏழைகள்.

பள்ளிக்கு பெயிண்ட் அடித்து அலங்கரிப்பதைப் பார்க்கிலும் தங்களது மஅல்லாவை கவனித்தாலே போதுமானது.

அரசியல்வாதிகள்-நீங்கள் தேர்தல் வந்தால் தேர்தல் செலவுக்காக அள்ளி வீணாக வீசும் பல கோடிகளைவிட குறைந்ததே நாம் இங்கு கூறிய செலவுகள்.

எனவே தயவு செய்து மேற்சொன்ன விடயங்களை எம் ஊர் அரசியல்வாதிகளும், தனவந்தர்களும் கவனமெடுக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

Yourkattankudy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s