• எம்.எஸ்.எம்.ஸாகிர்

maithiri iftharகொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு நாளை (30) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு முஸ்லிம் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர். எம். எச். ஏ ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பழைய, புதிய ஊழியர்கள், அரச உயர் அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

maithiri ifthar