பெண்களுக்கு எதற்கு பெருநாள் பஸார்..?

eid bazar– M-16

சமூகச் சீரழிவுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நமது ஊருல் தற்பொழுது பெண்களுக்கான பெருநாள் பஸார் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சம்மேளனக் கூட்டத்திலும் அடி தடி, பள்ளிவாயல் தெரிவிலும் அடி தடி என்று தலைமைத்துவத்தின் நிலைமை வேற இப்படி இருக்கையில்,

பெருநாள் பஸார் பெண்களுக்குத் தேவையற்றதொன்றே.

சிறுவர்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காத்தான்குடியில் ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் இடம்பெறும் இத்தகைய பெருநாள் பஸார் சிறுவர்களுக்கே மிகப் பொருத்தமானமாக அமையும்.

விளையாட்டுப் பொருட்களும், பலூன்களும், ஐஸ்கிறீம், பழவகைகள் கைகளிலும், வாயிலும் வைத்து உண்ணுவதற்கும் விளையாடுவதற்கும் சிறுவர்களுக்கே பெருநாள் பஸார் பொருத்தமானதாக இருக்கும்.

பெண்களுக்கு இத்தகைய பெருநாள் பஸார் ஏற்பாடு செய்தால் அங்கு விளையாட்டுப் பொருட்கள் அவசியமற்றது. பெண்களைக் குறிவைக்கும் ஆடை அலங்காரங்களும், மேக் அப் செட்டுகளும், அணிகலங்களும், கேளிக்கைகளும் தலைவிரித்தாடும்.

eid bazar

விற்பனையில் ஈடுபடும் ஆண்களுக்கும், பெண்களைப் பின் தொடரும் காமுகர்களுக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.

இறுதியில் ஓர் காணிவேலாக பெருநாள் பஸார் மாரும்.

இதைவிட தெளிவாகக் கூற முடியாது.

தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஊரில் சில மாற்றங்களைத் தோற்றுவித்து அவருக்கான நன்மதிப்பு மேலும் உயர்ந்திருப்பதாக மக்கள் பேசிக்கொள்கின்ற இந்நிலையில், நிச்சயமாக பெண்களுக்கான பெருநாள் பஸார் தேவையற்றது என்பதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s