காத்தான்குடிக்குள் நுழைந்தவர்கள் யார்?

kattankudy.jpg 1– AK-77

காத்தான்குடி: நேற்று (24) காத்தான்குடிக்குள் ஆட்டோ ஒன்றினுள் வந்த நபர்கள் யார் என்பது பற்றிய ஓர் சலசலப்பு காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது கிறீஸ் மனதன் எனும் மர்ம நபர்களும் ஊருக்குள் ஊடுறுவி இருந்ததும் இவ்வாறான நோன்பு காலமே.

கடந்த சில தினங்களாக கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் முச்சக்கர வண்டி ஒன்று நுழைந்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவரும் சிங்கள இளைஞர் இருவரும் இம் முச்சக்கர வண்டியில் வருகின்றனர். சில வீடுகளில் கதவு தட்டப்பட்டு வசூலுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சில வீடுகளில் வந்து, இங்கு வீடு, காணிகள் ஏதும் விற்பனைக்கு இருக்கின்றதா எனவும் கேட்கின்றனர்.
இதைவிட குறித்த முச்சக்கர வண்டியில் சிங்ஹலே எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் நோக்கம் பல வகையிலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.
அக்கறைப்பற்றிலும் இந்நபர்கள் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களிடம் இரகசியக் கமராக்கள் இருக்கின்றனவா என்பதை அறிய முடியவில்லை.

kattankudy.jpg 1

படம்: முகநூல் நட்பு

ஏற்கனவே காத்தான்குடியை இனவாதிகள் வீடியோ எடுத்துச் சென்றதையும் இந்நேரத்தில் கருத்திற்கொள்ளவேண்டியுள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் தங்களது கஸ்டங்களை சொல்ல முடியாத பல்லாயிரம் மக்கள் காத்தான்குடியில் வாழ்கின்றனர்.

kattankudy.jpg sinhale

படம்: முகநூல் நட்பு

அவர்கள் பணத்திற்கு இலக்கு வைக்கப்படுகிறார்களா என்பதும் தெரியவில்லை.
உண்மையில் பௌத்த வழிபாட்டுத்தல வசூலுக்கு வந்திருந்தால் அதற்கான ஆவணங்கள் இவர்களிடம் இருக்க வேண்டும்.

இவ்விடயமாக சம்பந்தப்பட்டவர்கள் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s