ரஷ்யாவைத் தொட்டுப்பார்க்க அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

helicopter-system-for-russianமொஸ்கோ: சோவியத் யூனியனின் பிரமான்டமான ரெட் ஆமி (Red Army), சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் பேர்லின்  கோட்டையை முற்றுகையிட்டு, இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல், சோவியத் யூனியனுக்கு என்று ஓர் தனிப்பெருமை உலகில் இருந்தது. அமெரிக்காவுக்கு சவாலாக இராணுவ விடயங்களில் முன்னேறிவந்த சோவியத் யூனியனை துண்டந் துண்டுகளாக உடைத்துவிட்டால் காலமெல்லாம் நாங்கதான் இந்த உலகத்துக்கே சண்டியன் என்ற நப்பாசையில் அமெரிக்கா சோவியத் யூனியனில் கைவைத்தது.

ஆனால் சோவியத் யூனியன் உடைக்கப்பட்டாலும், அதன் இதயப்பகுதி ரஷ்யாவிடம் அமெரிக்கா தன் வாலை ஆட்ட முடியாமல் இருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட அமெரிக்கா- ரண்யா பகை இன்றும் தொடர்கிறது.

கடலும் நிலமுமாக சூழ்ந்த, ரஷ்யாவின் சுகோட்கா தீபகற்பம் – அமெரிக்காவின் அலாஸ்காவில் தான் அரங்கேறும். யுத்த அறிவிப்பு வெளியானதும், முதல் வேலையாக, ரஷ்யா அதன் துறைமுகங்களை பரபரப்பாக்கும். அதன் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ஆன 3M-54KE, 3M-54KE1 மற்றும் 3M-14KE போன்றவைகளை யுத்த நோக்கத்திற்காக வெளிக்கொண்டு வரும். இவ்வகை ஏவுகணைகள் ஆனது, எல்ஏசிஎம் (LACM) எனப்படும், அதாவது லேண்ட் அட்டாக் க்ரூஸ் மிஸைல் என்று அர்த்தம். இதனுடன் சேர்த்து, Zvezda Kh-35 எனப்படும் ரஷ்யன் டர்போஜெட் சப்சோனிக் கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளையும் களமிறக்கப்படும்.

3m-54ke-ship-russia

ஏவுகணைகளோடு சேர்த்து, ஆளில்லா வான்வழி வாகனங்களும், அதனுடன் சேர்த்து, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ஆணைகளை வழங்கும் நோக்கத்திலான டிடெக்ஷன் அண்ட் டார்கெட் டெஸ்டினேஷன் மாட்யூல் ஒன்றும் அமைக்கப்படும். பின்னர், உலக நாடுகளின் தூக்கத்தை கெடுக்கும் ரஷ்யாவின் அதிநவீன மிஸைல் சிஸ்டங்கள் கொண்டுவரப்படும். அது எஸ்-300 ஆக இருக்கலாம் அல்லது, எஸ்-400 அல்லது எஸ்-500 ஆக கூட இருக்காலாம். எதுவாக இருந்தாலும் எதிரிகளுக்கு கிலி கிளம்புவது மட்டும் உறுதி.

helicopter-system-for-russian

எஸ்-500 என்பது ஒரு புதிய தலைமுறை சர்பேஸ் டூ ஏர் மிஸைல் சிஸ்டம் ஆகும். இது ஹைப்செனிசிக் குரூஸ் ஏவுகணைகள் உட்பட கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தக்க வரும் அத்துணை ஏவுகணைகளையும், தடுத்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். விமான தாக்குதல் என்றால்மணிகி 400கிமீ வேகத்தில் பாய்ச்சலை கொடுக்கும் இந்த மிஸைல் சிஸ்டம் ஆனது எதிர்வரும் ஏவுகணையை தாக்க வேண்டும் என்கிற நேரத்தில் மணிக்கு 600 கிமீ வேகம் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைமுகங்களுக்கு வந்து அடையும், மேற்கூறப்பட்ட அனைத்து ஆயுதங்களும், கண்காணிப்பு கருவிகளும், சரக்கு ரயில் வழியாக, தரைவழியாக, விமான வழியாக மற்றும் கப்பல் வழியாக, என அனைத்து வழிகளிலும் குறிப்பிட்ட தாக்குதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதாவது, நிலபகுதிகளில் மூன்று இடங்களிலும், கடல் பகுதிகளில் இரண்டு இடங்களிலும் என தாக்குதல் மையங்கள் நிலைநிறுத்தப்படும். இவைகள் ஒட்டுமொத்த சுகோட்கா தீபகற்பத்தையும் பாதுகாப்பு வட்டத்தின் கீழ் ஆட்கொள்ளும்.

russia

குறிப்பிட்ட நிலப்பகுதியை அடைந்த கண்காணிப்பு கருவிகளும், கடல் வான்வெளி மார்கமாக கண்காணிப்பை நிகழ்த்தும் ஆளில்லா விமானங்களும் தங்களது வேலையை ஆரம்பிக்கும். இவைகள் அனைத்தும் கூட்டு சேர ஒரு மாபெரும் ரேடார் வட்டம் உருவாகும். அந்த வட்டத்திற்க்குள் எதிரி நாடுகளின் விமானமோ அல்லது கப்பலோ அல்லது ராணுவ டாங்கிகளோ நுழையும் நொடிக்காக காத்திருக்கும். புத்திசாலித்தனமாக, ஒரே நேரத்தில் கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் மற்றும் வான் வழியாகவும், அமெரிக்கா, ரஷ்யாவின் ரேடார் வட்டத்திற்குள் நுழையும்.

நுழைந்த அடுத்த நொடி, எல்லை பாதுகாப்பு கண்காணிப்புகளை நிகழ்த்தும் கருவிகளிடம் இருந்து தாக்குதல் மையங்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும். அடுத்த கணமே, ஏவுகணைகள் சீறிப்பாயும், தரை வழி, கடல் வழி மற்றும் வான்வழி இலக்குகளை நோக்கி பாயும். இந்த இடத்தில் தான் ரஷ்யா, அதனொரு போர் தந்திரத்தை வெளிக்கிடும். ரஷ்யாவை போன்றேஎதிரி நாடும் ரேடார் கண்காணிப்புகளை நிகழ்த்தும் அல்லவா.? அப்போது ரஷ்ய ஏவுகணைகளை இடைமறித்து தாக்க வாய்ப்புள்ளது அல்லவா.?

russia combat-control-post-radar-system-

எதிரி நாட்டின் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் முனைப்பில் கீழ், அதன் முன், ரேடார் கொண்டு பாதுகாப்பு வட்டம் ஒன்று உருவாக்கப்படும். ரஷ்யாவின் ஏவுகணைகள் ஆனது, அந்த பாதுகாப்பு வட்டத்திற்குள் நுழைந்து சிக்கி கொள்ளாமல், அந்த வட்டத்தின் அகலப்பாதையை தொடாத வண்ணம், இரண்டு பக்கங்களிலும் வளைந்து சென்று எதிரியின் தளங்களை தாக்கி அழிக்கும். இதே தாக்குதல் பாணியானது, தரைவழி மாற்றம் கடசல்வழியிலும் நிகழ்த்தப்படும். எதிரிநாடு நிலை குலைந்து பின்வாங்கும். இதே பாணியிலான தொடர்ச்சியான தாக்குதலின் விளைவாக, ஒன்று எதிரி படைககள் காணாமல் போகும் அல்லது சரண் அடையும்.

ரஷ்யாவின் பலம் அமெரிக்காவுக்கு தெரிந்த விடயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s