இலங்கை வந்த பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் மரணம்

rugbyகொழும்பு: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரிட்டனைச் சேர்ந்த மற்றுமொரு ரக்பீ வீரரும் உயிரிழந்ததாக  பொலிசார் உறுதிப்படுத்தினர். நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த வியாழக்கிழமை (மே 10) ‘Clems Pirates Rugby’ அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் இரண்டு வீரர்கள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் 25 வயதான Thomas Howard கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். அத்துடன், 26 வயதான Thomas Baty அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

தோமஸ் ஹவார்டடின்  மரணம் காயத்தினாலோ, நோயினாலோ ஏற்படவில்லை என மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து ஆராய்ந்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி எம்.என். ராகுல் ஹக், மேலதிக விசாரணைக்காக வீரரின் உடல் பாகங்களை இரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பிவைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

rugby

கடந்த சனிக்கிழமை கொழும்பு ‘CR & FC’ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கலந்துகொண்ட பிரித்தானிய ரக்பி அணியின் வீரர்கள் சிலர், கொழும்பிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து இலங்கை ரக்பி சங்கத்தின் பணிப்பாளர் ரோஹான் குணசேகரவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கொழும்பு ‘CR & FC’ அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்டுக்கூறும் வகையில் எவ்வித சம்பவங்களும் நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த இரண்டு ரக்பி வீரர்களின் மரணம் குறித்து கொழும்பு கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s