இன்று சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்

parliament[1]கொழும்பு: ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, இன்று (01) காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும்.

இது தவிர, ஏற்கனவே உள்ள அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் இவ்வமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதோடு, புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், நாளைய தினம் (02) சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

இந்நிகழ்வு நாளை (02) 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளிலிருந்து விலகியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (01) சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்

01. லக்ஷ்மன் கிரியெல்ல – அரசாங்க தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு

02. டொக்டர் சரத் அமுனுகம – விஞ்ஞான, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சு

03. எஸ்.பி. நாவின்ன – உள் விவகாரம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

04. மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்

05. துமிந்த திஸாநாயக்க – நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

06. விஜித் விஜயமுனி டி சொய்சா – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு

07. பி. ஹரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சு

08. கபீர் ஹாஷிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு

09. ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்ட, ஒழுங்கு அமைச்சு

10. தலதா அத்துகோரள – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு

11. பைசர் முஸ்தபா – உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு அமைச்சர்

12. டி.எம். சுவாமிநாதன் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு

13. சாகல ரத்நாயக்க – இளைஞர் விவகாரங்கள், திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

14. மனோ கணேசன் – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சு

15. தயா கமகே – சமூக நலன் மற்றும் அடிப்படை கைத்தொழில் அமைச்சு

16. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – வலுவாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி

17. ரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு

18. விஜயதாச ராஜபக்ஷ – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s