விமானத்தில் பிராணவாயு எங்கிருந்து கிடைக்கிறது

planeலண்டன்: விமானங்களின் கெபின் வெளிக்காற்று அழுத்தத்தால் பாதிக்கப்படாத வகையில் சிறந்த தடுப்பு அமைப்புடன் உருவாக்கப்படுகிறது. இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான பிராண வாயு விசேஷ அமைப்பு மூலமாக எந்நேரமும் சப்ளை செய்யப்படுகிறது. பலரும் விமானத்திற்கு தேவையான பிராண வாயு வெளிப்புறத்திலிருந்து உறிஞ்சப்பட்டு, பின்னர் சுத்திகரிப்பு கருவிகள் உதவியுடன் விமானத்திற்குள் சப்ளை செய்யப்படுவதாக கருதுகின்றனர். விமானம் 35,000 அடி உயரம் வரை பறக்கின்றன.

 

அங்கு போதுமான காற்று இருக்காது என்ற கூற்று தவறானது. போதுமான காற்று இருந்தாலும், அதில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதற்காக விசேஷ அமைப்பு மூலமாக விமானத்தில் பயணிப்போருக்கான பிராண வாயு அளவு சீரான அளவில் தக்க வைக்கப்படுகிறது.

இதற்காக, விமானத்தின் உட்புற பகுதிக்கான காற்று எஞ்சினிலிருந்துதான் பெறப்படுகிறது. எஞ்சினில் இருக்கும் கம்ப்ரஷர்கள் மூலமாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் பெறப்படும் அழுத்தம் கூட்டப்பட்ட காற்றுதான் கேபினுக்குள் பல்வேறு அமைப்புகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு சப்ளையாகிறது

plane
yourkattankudy/plane

எஞ்சின்களிலிருந்து கழிவாக வெளியேறும் காற்று புகைப்போக்கி வழியாக வெளியேற்றப்படும். ஆனால், கேபினுக்கு தேவைப்படும் காற்று கம்பரஷர்கள் மூலமாகவே சப்ளை செய்யப்படுகிறது. எஞ்சின் கம்பரஷரிலிருந்து பெறப்படும் இந்த காற்று 200 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை Bleed Air என்று குறிப்பிடுகின்றனர்.

இதனை முதலில் குளிர்விப்பு அமைக்குள் செலுத்தி சரியான வெப்பநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்னர், சுத்திகரிக்கப்படும் தடுப்பு அமைப்பு வழியாக கேபினுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த காற்றையே பயணிப்பவர்கள் சுவாசிக்கின்றனர்.

plane
yourkattankudy/plane

விமானத்தின் பின்புறத்தில் கொடுக்கப்படும் சிறிய வால்வு அமைப்பு மூலமாக கேபினுக்குள் இருக்கும் அசுத்தக் காற்று வெளியேற்றப்படுகிறது. இந்த தொடர் நிகழ்வு மூலமாக கேபினுக்குள் சீரான காற்றழுத்தமும், குளிர்ச்சியும் தக்க வைக்கப்படுகிறது.

விமானத்தை செலுத்துவதற்கு மட்டுமல்ல, பயணிப்பவர்களுக்கு சீரான பிராண வாயுவை பெறுவதிலும் எஞ்சின்களின் பங்கு முக்கியமானது. இந்த வேளையில், எஞ்சின்கள் பழுதடைந்தால் பிரச்னை எழும் என்பது தெரிந்ததே.

plane 1
yourkattankudy/plane

முதலில் வெளியேற்றும் வால்வு அமைப்பை விமானிகள் மூடிவிடுவார்கள். இதன்மூலமாக, விமான கேபினுக்குள் உடனடியாக காற்றழுத்தம் மாறுபாடு ஏற்படாது. எனினும், காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும்.

அந்த சமயத்தில் விமானங்களில் பிரத்யேக உருளைகளில் ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக கொடுக்கப்படும் ஆக்ஜிஜன் மாஸ்க் மூலமாக, அந்த உருளைகளில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்க அறிவுறுத்தப்படும்.

அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பயணிகளுக்கு வழங்க முடியும். அதற்குள், அருகிலுள்ள விமான நிலையத்தை நோக்கி விமானத்தை செலுத்தி தரை இறக்க முடிவு செய்கின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s