கொல்கத்தா: டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் அணிகளுக்கு, டி-20 அந்தஸ்து அளிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசியின் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான ஒரு முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் டி-20 கிரிக்கெட் அணிகளுக்கு டி-20 அந்தஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், யுஏ, ஓமன், நேபாளம் என, 18 நாடுகளுக்கு டி-20 அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் அணிகளுக்கு டி-20 அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஜூலை 1 முதல் விளையாடப்படும் அனைத்து மகளிர் டி-20 போட்டிகள் மற்றும், 2019 ஜனவரி 1 முதல் விளையாடப்படும் ஆடவர் டி-20 போட்டிகள் அனைத்துக்கும் சர்வதேச அந்தஸ்து அளிக்கப்பட உள்ளது.
மேலும், சர்வதேச அளவில், டி-20 போட்டிகளுக்கான தரவரிசையும் அளிக்கப்பட உள்ளது.