• எம்.ரீ. ஹைதர் அலி

shibly - meeravodaiமீராவோடை: எமது பிரதேசங்களிலுள்ள அதிகமான விளையாட்டுக் கழகங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதனை அவாதனிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை இணைத்துக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடும் கழகங்களாக தற்போது விளையாட்டுக் கழகங்கள் செயற்பட்டு வருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்திற்கு அலுவலகத் தேவைப்பாட்டிற்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு அக்ரம் விளையாட்டுக் கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2018.04.15ஆம்திகதி – ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

shibly - meeravodai

விளையாட்டுக் கழகங்கள் என்கின்றபோது விளையாட்டுடன் மாத்திரம் தங்களை சுருக்கிக் கொள்ளாது சமூகத்திற்கு தேவையுள்ள தேவைகளை இக்காலகட்டத்தில் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்பு கட்டாயம் ஒவ்வொறு துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இப்பொழுது அதிக பேசு பொருளாக காணப்படுகின்ற ஓர் விடயம் இளைஞர்களிடத்தில் போதைப்பொருள் பாவனை. இவற்றை தடுப்பதற்கான வழிவகைகளை நாம் சமூக வலைத்தளங்களிலும், கருத்தரங்குகளிலும் அதிகமாக பேசப்பட்டாலும் அவைகள் குறைவடைந்ததாக இல்லை.

எனவே இவ்வாறான சமூக சீர்கேடுகளை எம்சமூகத்திலிருந்து அடியோடு இல்லாமல் செய்வதற்கும் இவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.