– பா. திருஞானம்
கொழும்பு: மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபடிப்பினை மேற்க் கொண்டு நிறைவு செய்த 1600 கல்வி முதுதத்துவமாணி, கல்வி முதுமணி கல்வி, முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்விமாணி பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் கொழும்பு பண்டாராநாக்க ஞாபகார்த்த சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் (28) நடைபெற்றது.
இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டாம் கட்ட பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.