ஏப்ரல் 3ம் திகதியும் பிரித்தானிய முஸ்லிம்களும்

  • MJ

uk muslims.jpg 1லண்டன்: “Punish a Muslim day” எனும் ஏ4 அளவில் அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை ஒன்று பிரித்தானியாவில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் லண்டன், செப்ஃபீல்ட், பிரட்ஃபேர்ட், லெஸ்டர் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் உள்ள சில வீடுகளில் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலரது வீட்டுக் கதவின் ஊடாக போடப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக பிரித்தானிய பொலிஸார் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களை இலக்குவைத்து, முஸ்லிம்கள் மீது வகைப்படுத்தப்பட்ட சில தாக்குதல்களை மேற்கொள்வதும், அதற்கான புள்ளிகளும் இவ் அறிவித்தலில் கூறப்பட்டிருக்கின்றது.

இவ் அறிவித்தலை ஓர் பயங்கரவாதக் குற்றத்தின்கீழ் எதிர்கொண்டு, பொலிஸார் தேடுதல் வேட்டையில் களமிறங்கியிருக்கின்றனர். இவ்விளம்பரத்திற்கிணங்க செயல்படும் முஸ்லிம்களுக்கு எதிரானோர், பயங்கரவாதக் குற்றத்தடுப்பின் கீழ் சட்டத்தை எதிர்கொள்ளவேண்டி வரும் என மெட்ரோபொலிடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஏப்ரல் 3 அல்லது எப்போதாவது இவ்வாறான இனவெறித் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டால், உடனடியாக டெல்மமாயுகே-  TellMAMAUK அல்லது 101 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி கோசங்கள் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் கடந்த 2017 இல் வெளியாகி இருந்தன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் பள்ளிவாயல்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

“சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவது வழமையானவையாக இருந்தும் தாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்” என சில பள்ளிவாயல்களின் இமாம்கள் கோரியுள்ளனர்.

“இது ஒரு மொட்டைக்கடிதம் போன்ற ஓர் அச்சுறுத்தலேயன்றி வேறொன்றுமில்லை” என சில பொதுமக்கள் கருதுகின்றனர்.

பிரட்ஃபேர்ட் நகரில் பல முஸ்லிம் வீடுகளுக்கு இக்கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாஸ் ஷா தெரிவிக்கிறார்.

இதுவரையில் மேற்கு யோர்க்சைரில் 6 முறைப்பாடுகளும், தெற்கு யோர்க்சைரில் இருந்து 3 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக யோர்க்சைர் மாநில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

uk muslims.jpg 1

yourkattankudy/uk

ஒரு முறைப்பாடு கிழக்கு லண்டனிலிருந்தும், மற்றைய ஒரு முறைப்பாடு SW4 இடத்திலிருந்தும் கிடைக்கப்பெற்றிருப்பதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் கூறுகின்றனர்.

ஏப்ரல் 2இல் ஈஸ்டர் பெரிய ஞாயிறுதினத்தை அடைந்த மறுநாள் திங்கட்கிழமை இதற்கான “மொட்டை” அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

இத்தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை பொலிஸார் வலைவிரித்துத் தேடுகின்றனர்.

பிரித்தானியாவில் 2011 கணக்கெடுப்பின்படி பிரித்தானியாவில் மொத்த சனத்தொகையில் 4.4 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

சொந்த நாடுகளில் கிடைக்கப்பெறாத மதச் சுதந்திரங்களையும், சலுகைகளையும் இங்கு பெறுகின்றனர்.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பிரதமர் அலுவலகம் முன்னிலையில் இதுவரை இடம்பெற்ற போராட்டங்களில் அதிகமானவை, முஸ்லிம்களுக்கு ஆதரவான போராட்டங்களே இடம்பெற்றிருக்கின்றன.

பிறர் மத, இன உரிமையை மதிப்பதில் பிரித்தானிய அரசு அதிக அக்கறை செலுத்துவது முதன்மையான விடயம். இந்நிலையில் ஏப்ரல் 3 எச்சரிக்கை விடயமாக அதிக அக்கறை பொலிஸார் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. MJ

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s