digana– AK-48

கண்டி: நள்ளிரவைத் தொடும் இலங்கையின் இந்நேரத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள தாக்கப்படாத முஸ்லிம் ஊர்களைக் குறிவைத்து பேரினவாத காடையர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. பள்ளிவாயல்களையும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும், வாகங்களையும் பெற்றோல் குண்டுகளை வீசியும், கல்லெறிந்தும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இந்நேரத்தில் திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.

சில இடங்களில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அறியக்கிடைக்கிறது.

பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படவும். பொலிஸாருக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் கொடுங்கள். மேலதிக விடயங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படும்.