அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கள விஜயமும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான முழு அளவிலான ஏற்பாடுகளும்

hakeem digana 2018கண்டி: நீதிமன்ற தடையையும் தாண்டி வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் ஒன்றுதிரண்டு மரணமடைந்த சிங்கள இளைஞ்சனை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றதோடு திகன பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்ததுடன், பொதுமக்களையும் தாக்கி, வீடுகளுக்கு கல் எறிந்து பள்ளிவாசல்களையும் முற்றாக சேதப்படுத்தினார்கள்.

விடயத்தினை அறிந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் உடனடியாக பிரதமர் ரணில் விகரமசிங்கவினை தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கியதற்கு அமைவாக பொலிசாரும், அதிரடிப்படையினர்களும் ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.

அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் அங்குமிங்குமாக சிதறி வாழ்ந்து வருவதனாலும், பூகோள ரீதியில் பல கருந்தடி பாதைகளும், குறுக்கு வீதிகளுமாக அமைந்துள்ளதனால் நூருவீதமாக பொலிசாரின் கட்டுப்பாட்டின்கீழ் அப்பிரதேசங்களை கொண்டுவருவதில் பாரிய சிக்கல்கள் இருந்தது.

இவ்வாறான ஒரு பதட்டமான சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை நேரடியாக உறுதிப்படுத்தும் விதத்தில் பாதுகாப்புப் படையினர்களின் தடையினையும் மீறி அமைச்சர் ரவுப் ஹக்கீம் திகன பிரதேசத்துக்கு விரைந்தார்.

இந்த வன்முறை கண்டி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுகின்ற சாத்தியகூறுகள் தென்பட்டதனால் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்ரிபால சிரிசேனா அவர்களை தொடர்புகொண்டு முழு மாவட்டத்தின் முஸ்லிம்களின் மேலதிக பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தினர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

hakeem digana 2018

அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் திகன பிரதேசத்துக்கு செல்லும்வழியில் சிங்கள காடையர்களினால் சுற்றிவளைக்கப்பட்டு அச்சுறுத்தல் உருவான நிலையிலும் வன்முறைகள் நடைபெற்ற இடத்தை சென்றடைந்து சேதமடைந்த அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

அத்துடன் பதட்டமான நிலையில் இருந்த ஏனைய பிரதேசங்களான தென்னங்கும்புற, மடவள, கட்டுகஸ்தோட்ட உட்பட மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை வரைக்கும் முஸ்லிம்கள் சிதறியும், செறிவாகவும் வாழுகின்ற பிரதேசங்களுக்கு சென்று அம்மக்களின் பாதுகாப்பினை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பார்வையிட்டார்.

அப்பிரதேசங்களின் ஒவ்வொரு குறுக்குப்பாதைகள், சந்திகள், தாக்குவதுக்கு இலகுவாக ஊடுருவக்கூடிய பிரதேசங்களை நேரடியாக அடையாளப்படுத்தி அவ்வாறான இடங்களிலெல்லாம் படையினர்களை பாதுகாப்பு கடமைகளில் அமர்த்துவதப்பட்டதனை நேரடியாக களத்தில் நிறு உறுதிப்படுத்தினார்.
ஆனாலும் சில இடங்களில் பாதுகாப்புப் படையினர்களையும் மீறி ஒரு சில சிறியளவிலான அசம்பாவிதங்கள் நடைபெற்றும் உள்ளது.

நேற்று மாலை நான்கு மணியிலிருந்து இந்த கட்டுரை எழுதுகின்ற நல்லிரவு இரண்டு மணிவரைக்கும் ஓய்வின்றி மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களுக்கும் சென்று மக்களின் பாதுகாப்பு பணியினை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பார்வையிட்டுக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆஸிக் அஹமத்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s