சிரியாவில் 5 இலட்சம் மக்களைக் கொன்றொழித்த தந்தையும் மகனும்

Syrian President Bashar al-Assad  performed Eid al-Adha Prayersஓர் வரலாற்று ஆய்வு

டமஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியும் முக்கிய காரணம் ஆகும். 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்தியாவை போலவே சிரியாவுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.

அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார். அப்போது ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் வந்து கொண்டு இருந்தது.

ஹபீஸ் அல் அசாத் அவ்வப்போது கொஞ்சம் நன்றாகவே நடந்து கொண்டார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். ஆனால் அங்கு 90 சதவிகித மக்கள் சன்னி. அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி மக்கள் இருந்தார்கள்.

அப்போது 1998 தொடக்கத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார்.ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Syrian President Bashar al-Assad  performed Eid al-Adha Prayers

yourkattankudy/syria

விதியின் குரூரம் இங்குதான் விளையாடியது. பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத்திற்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது. நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை.

ஹபீஸ் 2000ல் மரணம் அடைந்தார். அப்போதுதான் சரியா பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு வேறு விதமான திட்டங்களோடு காத்து இருந்தது.

வந்தது சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டார்கள். அரசின் அனைத்து பிரிவில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டார். ஆசை ஆசையாக காத்து இருந்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 18 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். இந்த 48 வருடங்களில் யாருக்கும் வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.

-The-Syrian-civil-war[1]

yourkattankudy/syria

இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது. உலக நாடுகள் அதிபருக்கு உதவியாக வந்தது. துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்த போர் முடியும் என்பதற்காக எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் மரணம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது 5 லட்சத்தை தாண்டும் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் தான் இப்போது போர் உச்சம் அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

palmyra syria

yourkattankudy/syria

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s