• இனியவன்

local election kattankudyகாத்தான்குடி: ஆட்களை ஆட்கள் குறைகூறி முடிப்பதற்கான கால அவகாசத்திற்கு சுமார் இன்னும் 3 வாரங்கள் இருக்கின்றன. பொய்கள் பொக்கிஷங்களாகவும், ஊழல் மோசடிகள் ஹைலைட்டாகவும் கொண்டமைந்த தேர்தல் மேடைகள் ஊருக்கு முஸ்பாத்திகளாக அமைகின்றன.

இலங்கையில் எந்த ஊரிலும் இல்லாத கொண்டாட்டம் எமது ஊரில் இருப்பது வரலாறு. அது ரமழான் தலைப்பிறை என்றாலும், ஷவ்வால் தலைப்பிறை என்றாலும் சண்டை பிடித்துக்கொள்வதில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைவிட மகிச்சி தேர்தல் மேடைகள்..

தேர்தல் கூட்டத்திற்கு சென்றால் அன்பளிப்புக்கள் நிறைவாகக் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அதிகமான மக்கள் கை சின்னத்திற்கு செல்கின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்களை இரசிப்பதற்கு இரட்டைக் கொடிக் கட்சிக் கூட்டத்திற்கும், எதிர்கால திட்டங்களுக்காக தராசு சின்னத்திற்கும், என்ன நடக்கிறது என்று புதினம் பார்க்க மணிக்கட்சிக்கும் மக்கள் செல்வதைக் காணக்கிடைக்கிறது.

காத்தான்குடியில் இறங்கி அரசியல் செய்வது என்பது சாதாரண விடயம் ஒன்றல்ல. தேர்தலில் குதித்தால் வென்றுவிடலாம் என்ற நப்பாசையில் பலர் இம்முறை குதித்திருந்தாலும், களமிறங்கினால்தான் காத்தான்குடி மக்களின் விசுவாசம் என்னவென்று புரியும்.

local election kattankudy

தனக்கு பகிரங்மாக ஆதரவளிக்கும் மக்களைவிட, எல்லோரையும் ஆதரிக்கிறோம் என்ற நிலையில் வேட்பாளர்களைப் பகைக்காமல் நடுநிலைபோல் பாசாங்கு செய்யும் மக்கள் காத்தான்குடியில் முக்கால்வாசிப்பேர் இருக்கின்றனர்.

இவர்களின் வாக்குகள்தான் இன்ஸாஅல்லாஹ் தேர்தல் களத்தை அலங்கரிக்க இருக்கிறது.

இதுவரைகிடைத்திருக்கும் தகவலின்படி எவரும் 50 வீத ஆதரவைப் பெறவில்லை.

கை முதலாவதாகவும், தராசு இரண்டாவதாகவும், இரட்டைக்கொடி மூன்றாவதாகவும் தற்போதைய நிலையில் காணப்படுகின்றன.

அன்பளிப்புக்கள் மக்களை மாற்றுமா அல்லது விசுவாசமும் நன்றிக்கடனும் வேட்பாளர்களை சென்றடையுமா என்பதை இன்ஸாஅல்லாஹ் இறுதியாக நோக்குவோம்.

இனியவன்,

யுவர்காத்தான்குடி