வட்ஸ்ஆப்பில் ‘டிஸ்மிஸ்’ செய்யும் புதிய அம்சம்

whats appலண்டன்: பிரபல மெசேஜிங் தளமான வட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை ‘டிமோட்’ அல்லது ‘டிஸ்மிஸ்’ செய்யுமாறு புதிய வட்ஸ்ஆப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விடயமொன்றும் உள்ளது.

டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக ‘ஆட்’ (add) செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது.

தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

whats app

yourkattankudy

பொதுவான உருட்டல்களுக்கு முன்னரே புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான வட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ-வின் கருத்துப்படி, க்ரூப் இன்ஃபோ-வின் கீழ், க்ரூப்பை விட்டு ஒருவரை நீக்காமலேயே வெளியேற்றி வைக்க உதவும் ‘அட்மின் டிஸ்மிஸ்’ அம்சம் இடம்பெறும்.

“தற்போது வரையிலாக, இந்த புதிய வாட்ஸ்ஆப் அமசன்மானது ஐஓஎஸ் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் உருட்டப்படலாம். ஆண்ட்ராய்டு தளத்தை பொறுத்தமட்டில் இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 2.18.12 பதிப்பில் டீபால்ட் ஆக கிடைப்பதாகவும்” வெளியான அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளே பீட்டா ப்ரோகிராம் வெர்ஷனின் கீழ் வாட்ஸ்ஆப்பின் 2.17.430 பதிப்பில் ‘ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ்’ என்கிற வரையறுக்கப்பட்ட குழும அமைப்பை வாட்ஸ்ஆப் சமர்ப்பித்துள்ளது. இந்த ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ் அமைப்பை குழு நிர்வாகிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதன்வழியாக, குறிப்பிட்ட உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி, குழுவை சாதாரணமாக நகர்த்தலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s