அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் திருத்தாது

  • AK- 49

kattankudy main roadகாத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கும் கலாசார சீரழிவுகளைத் தடுக்கும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்னளின் சம்மேளனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இவ்வாறான அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் சீர்திருத்தப்போவதில்லை!

1992 இல் காத்தான்குடி சம்மேளனம் ஏற்படுத்திய திருமண சீர்திருத்தம் எனும் அறிக்கை செல்லாக் காசாகச் சென்றுவிட்டது.

2006 இல் ஊர்மக்களுக்காக காத்தான்குடி ஜம்மியித்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட, கத்தம், பாத்திஹா மற்றும் கந்தூரிகளுக்கான எதிர்ப்பு அறிக்கை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மஹிந்த சிந்தனை சொத்துக்களையும், மக்கள் பணங்களையும் தனக்கு அபகரித்துக்கொள்ள உதவியதைத் தவிர நாடு படு பாதாளத்திற்குச் சென்றிருந்தது.

இப்போதய ஜனாதிபதியின் 100 நாள் திட்டம் பற்பல கள்ளர்களையும், மோசடிக்காரர்களையும் மென்மேலும் வளர்த்துச் சென்றிருக்கின்றது.

kattankudy4

yourkattankudyimagesak49

இதைவிட, தேர்தல் வந்தால் அவ்வப்போது இயக்கங்களாலும், சுயேட்சைக் குழுக்களாலும் பொதுவாக அரசியல்வாதிகளால் விடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பாராளுமன்றம் போனதும், கிழங்குக் கடையில் பார்சல் சுத்துவதற்கு அவை உதவியாக இருக்குமே தவிர, ஊருக்கு உபகாரமாக இவ்வறிக்கைகள் இருக்கப்போவதில்லை.

அறிக்கை விடுபவர்கள் எத்தனைபேர் தங்களது வயது வந்த பெண்குழந்தைகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்களைக் கொடுத்துள்ளோம் என்பதையும்;,

தங்களது பெண்களை அந்நியவர்கள், தொழிலாளர்களுடன் தொழில் நிமித்தம் தொலைபேசியில் உரையாட இடம்கொடுத்துள்ளோம் என்பதையும்,

ஊருக்கு வெளியில் பருவ மங்கைகளை தனியார் வகுப்புக்களுக்கு அதுவும் அந்நிய ஆண்கள் சூழ்ந்திருக்கும் கலப்பட வகுப்பிற்கு அனுப்புகிறோம் என்பதையும் தங்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும்.

செயலில் இறங்குங்கள். கலாசார சீரழிவுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவைகளை செயல் ரீதியாகத் தடுங்கள். மாநாடுகளை நடாத்துங்கள்.

உம்ராவுக்கு தனது வர்த்தக நோக்கத்திற்காக மக்களை அழைக்கும் விடயங்களை தவிர்த்து, இவ்வாறான கலாசார சீரழிவுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுகளை முன்னெடுக்க உலமாக்கள் முன்வர வேண்டும்.

முகநூலில் வீர வசனங்கள் போடுபவர்களும், குர்ஆன், ஹதீஸ்களைப் பதிவிடுவோர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து இவ்விடயங்களுக்கு தீர்வினைப் பெறச் செய்யவேண்டும்.

அறிக்கைகள் ஒருபோதும் சமூகத்தைத் சீர்திருத்தாது. களத்தில் இறங்க வேண்டும். AK-49

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s