தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

armyகொழும்பு: விடுமுறை பெறாது, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம்  இன்று (22) நிறைவடைகின்றது. அதன் அடிப்படையில், சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விடுபடுவதற்கான கால எல்லை நாளையுடன் (22) நிறைவடைகின்றது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இப்பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைககளுக்கு அமைய குறித்த பொதுமன்னிப்பு காலம் நவம்பர் 15 இலிருந்து நவம்பர் 22 வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

army

இராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய கடந்த நவம்பர் 15 ஆம் திகதி வரை, 8,052 இராணுவ உறுப்பினர்கள் சரணடைந்துள்ளதோடு, இதில் 10 அதிகாரிகள், 8 கடேற் அதிகாரிகள் மற்றும் 8,034 ஏனைய தரத்திலுள்ளவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சமய தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உறவினர்கள் தலையிட்டு, தாங்கள் அறிந்த இராணுவ உறுப்பினர்களிடம் இவ்வாய்ப்பை பயன்படுத்தி சட்ட ரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு அவர்களை தெளிவூட்டுமாறு இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s