உயர்தர மாணவி “பாலியல் விவகாரம்”: புதிய நிர்வாகசபை தலையிடவேண்டும்

oddamavadi – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி: ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவர் ஆரம்ப பிரிவிற்கு கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரினால் பாலியல் உரவிற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படும் ஓர் பாரதூரமான சம்பவமானது கடந்த ஓர் வார காலமாக முக நூல்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற முக்கிய விடயமாகவும், தேசியத்தில் உள்ள தமிழ் பேசும் சமூகத்தின் பார்வை மட்டுமல்லாது கடல் கடந்த சமூகத்தின் பார்வை கூட குறித்த பாடசாலையையும் ,ஓட்டமாவடியையும் நோக்கியதாக மாறியுள்ளது.

இந்த விடயம் இவ்வாறு சமூகமயப்படுத்தப்பட்டு முகநூல்களில் பேசப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்த குற்றச்சாட்டானது தன் மீது சுமத்தப்பட்ட அப்பட்டமான பொய் என அல்லாஹ் மீது சத்தியம் செய்து கல்குடா நேசன் இணைய தளத்திற்கு ஓர் மடலினை அனுப்பி அது பிரசுரிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் இந்த பிரச்சனையானது முகநூல்களில் மீண்டும், மீண்டும் பதிவேற்றப்பட்டு முழு உலகமும் அசைப்போட்டு கொண்டிருக்கும் விடயமாகவே உள்ளது.

இதனால் குறித்த ஆசிரியரும், மாணவியும் பாதிப்புக்குள்ளாகும் அதே நேரத்தில் எமது பிரதேசத்திற்கும், குறித்த பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலைக்குமே அவப் பெயராகவும், அழிக்க முடியாத வடுவாகவும் மாறியுள்ளது.

oddamavadi

ஆகவே மூன்று உலமாக்கள், படித்த புத்தி ஜீவிகள் என அடங்கலாக பிரதேசத்தில் தப்லீக் ஜமாத்திற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற இஸ்லாமிய சிந்தனையுடனான புத்தி ஜீவியினை தலைமையாக கொண்டு இயங்குகின்ற ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் புதிய நம்பிக்கையாளர் சபையானது உடனடியாக குறித்த விடயத்தில் தலையிட்டு உண்மையினை மக்களுக்கு தெளிவுபடுத்தி பிரச்சனையினை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பிரதேசத்தில் உள்ள சமூக சிந்தனையாளர்களினதும், புத்தி ஜீவிகளினதும் கருத்தாக இருக்கின்றது.

அத்தோடு தங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு குறித்த விடயத்தினை ஆலால் முகநூல்களில் அசைபோட்டு கொண்டு இருக்காமல், சம்பந்தபட்ட பாடசாலைக்கு சென்று விசயத்தை கேட்டறிந்து உண்மை என்றால் அதற்குறிய தீர்விற்காக சட்டத்தின்பால் நாடுவது அல்லது ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவயலின் புதிய நிருவாகத்திடம் ஒப்படைக்கும் முடிவினை எடுப்பதே சிறந்தது. அதையும் தாண்டி சம்பந்தபட்டவர்களின் இறைச்சியை சாப்பிடாமல் விட்டு விடுவதே கலீமாவினை மொழிந்த இஸ்லாமியனுக்கு அழகு. அப்படி இல்லா விட்டால் நாளை மறுமையில் இறைவனிடத்தில் எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும். இதை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s