2011 முதல் 2013 வரை சீனா பயன்படுத்தியிருக்கும் சிமெண்டின் மொத்த அளவு அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் மொத்த அளவைவிட அதிகமாகம். இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,615 மில்லியன் டன் சிமெண்ட்டை சீனா பயன்படுத்தியுள்ளது!
ஐஸ்கிரீமின் தாயகம் சீனாதான். கி.மு. 200இல் சீனாவில் ஐஸ்கிரீம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதல் ஐஸ்கிரீம் பால் மற்றும் அரிசி கலந்து செய்யப்பட்டது.
மிகப்பெரிய பிரதேசமாக இருந்தபோதிலும், சீனா முழுவதுமே ஒரே கால வலையத்தில் உள்ளது.
சீனாவில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்துவருவதால் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு தூய காற்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டில் தூய காற்று ஐந்து யுவான்க்கு விற்கப்படுகிறது. சீனாவில் பலவகையான பெயர்களில் (பிராண்டுகளில்) காற்றுகள் விற்கப்படுகின்றன. ஒரு வகை ‘திபெத்தின் அசல் காற்று’, அடுத்தது ‘புரட்சிகர யாஹ்யன்’, மற்றொன்று ‘தொழிற்துறைக்கு பிந்தைய தைவான்’.
‘கெட்சப்’பின் தாயகம் சீனாதான். அதேபோல் காரசாரமான மீன் சாஸும் சீனாவைச் சேர்ந்ததே.
கால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாக கூறப்படுகிறது. ஃபிஃபாவின் எட்டாவது தலைவர் செப் பிளட்டர் கால்பந்தாட்டம் சீனாவில் தொடங்கியது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டுகளில் சீனாவில் கால்பந்து விளையாட்டு தோன்றியதாக கூறப்படுகிறது.
சீனா அதிகாரபூர்வமாக நாத்திக நாடாக இருந்தாலும், இங்கு இத்தாலி நாட்டைவிட கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். சீனாவில் கிறித்துவ மதத்தை பின்பற்றும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் உள்ளனர், இத்தாலியின் கிறித்துவ மக்கள்தொகை 4.7 மில்லியன் மட்டுமே. சீனா விரைவிலேயே உலகிலேயே அதிக அளவிலான கிறித்துவர்கள் வசிக்கும் நாடாக மாறும் என்று கூறப்படுகிறது.
சீன மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவார்கள், ஆனால் இந்த பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்துவிட்டது. இப்போது சீனாவில் நாய்களும், பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் பாம்புக்கறி தற்போதும் சீன மக்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கிறது.
இறைச்சி வகைகளில் பன்றி இறைச்சியை அதிகம் விரும்பும் சீனாவில் தினசரி சராசரியாக 17 மில்லியன் பன்றிகள் மக்களின் பசியை தீர்க்கின்றன. இருந்தாலும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பன்றி இறைச்சி கட்டுபடியாகாத அளவு விலை உயர்வானதாம்!
ஹாங்காங்கில் வசிக்கும் சீனர்கள் ஒரு நாள் விடுமுறைக்கு எடுத்துக் கொண்டு தங்கள் முன்னோர்களில் கல்லறைகளை சுத்தம் செய்வார்களாம்!
சீனாவில் மணப்பெண்கள் சிவப்பு உடை அணிவது பாரம்பரியமான வழக்கம். சீனாவில் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை குறிப்பாதகவும், வெண்மை நிறம் மரணத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
உலகில் உள்ள ஐந்து நபர்களில் ஒருவர் சீன நாட்டை சேர்ந்தவராக இருப்பார்.
1978 ல், சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ சந்தைக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 1980 களில் சீனா தனது சந்தையை கடைவிரித்தபோது, அது உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக மாறியது. அதிலிருந்து 2010 வரை மூன்று தசாப்தங்களாக சீனப் பொருளாதாரம் சராசரியாக 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.