எரியும் மியன்மார் முஸ்லிம்களும் நகைப்பிற்கிடமான முகநூல் போராட்டமும்….

APTOPIX_Bangladesh_Myanmar_t607[1]ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வெகுளிப்போராட்டங்கள் எத்தகைய பயனையும் தராது. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் எமது தளத்தில் வெளியான ஆரோக்கியமான இக்கட்டுரை இன்றைய முகநூல் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமாக மீள் பிரசுரிக்கப்பபடுகிறது.

– AK-48

காத்தான்குடி: மியன்மார் முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்படுவது 2012 இல் இருந்துதான் முகநூல் வாயிலாக எமக்கு தெரியக்கிடைக்கிறது. இருந்தாலும் 60 வருடங்களாக அங்குள்ள முஸ்லிம்கள் அழித்து, எரித்தும் போதாதென்று சொந்த மண்ணை விட்டும் அடித்து விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அங்குள்ள பௌத்த பேரினவாதிகளால்.

இவ்வாறிருக்க, முகநூலில் நேற்றைய தினமான 27ம் திகதி, முகநூல் பயனாளர்களை தங்களது அடையாள படங்களை (profile picture) மியன்மார் கண்டனத்தைப் பிரதிபளிக்கும் முகமாக மாற்றும்படியும் சிலர் கேட்கப்பட்டதற்கமைவாக, சிலர் தங்களது அடையாளப் புகைப்படத்தை மியன்மார் முஸ்லிம்களின் கொடூரங்களைக் கொண்டமைந்த படங்களைக் கொண்டு பதிவேற்றிருந்ததையும் காண முடிகிறது.

இவ்வாறான நகைப்பிற்கிடமான போராட்டங்களால் எதனைச் சாதிக்க முடியும் என இத்தகைய முகநூல் பயனாளர்களை நோக்கிக் கேட்கிறோம்.

ஏசி அறைக்குள் இருந்துகொண்டு, அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் இணைய இணைப்பை (internet) சொந்த இணைப்பாகப் பெற்றுக்கொண்டு ஓசியில் இணையத்தளம் பயன்படுத்தும் பலர் இத்தகைய போராட்டத்தில் முன்னிலையில் இருப்பதையும் காண முடிகிறது.

முகநூலில் செய்திகளைப் பதிவேற்றுவதில் எந்தத்தப்பும் கிடையாது. ஆனால் தீப்பற்றி எரியும் மியன்மார் முஸ்லிம்களுக்காக முகநூல் அடையாளப் படங்களை மாற்றுவதால் மியன்மாரின் பௌத்த தீவிரவாதத்தை அடக்க முடியாது.

நாலு பேரினவாதி சேர்ந்து, இவ்வாறுதான் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று அவர்களைச் சிந்திக்க வைக்கும் நிலைக்கு நாம் சந்தர்ப்பம் வழங்கும் நிலையே ஏற்படுகிறது.

முகநூலில் அடையாளப்படங்களை மாற்றுவதிலோ, காகித அட்டைகளில் எழுதி, “அமெரிக்காவே, ஐ.நா.வே, பிரித்தானியாவே மியன்மாரில் ஏற்பட்டிருக்கும் பௌத்த பயங்கரவாதத்தை நிறுத்து!” அங்குள்ள முஸ்லிம்களைக் காப்பாற்று!” என்று கைகளில் ஏந்தி போராடுவதிலோ, முகநூலில் பரவவிடுவதிலோ எத்தகைய வெற்றியையும் பெறமுடியாது.

நாம் எத்தனைபேர் அதிகாலையில் எழுந்து தொழுது, மேலும் ஐவேளைத் தொழுகைகளிலும் மியன்மார் முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தித்தோம் என்பதை எங்களது மனச்சாட்சியிடம் ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்க வேண்டும்.

அமெரிக்க, பிரித்தானிய மற்றும் உலகின் பிரதான ஊடகங்கள் அனைத்தும் மியன்மாரில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உயிராபத்துக்களையும், சொந்தமண்ணிலிருந்து அகதிகளாக விரட்டப்படுவதையும் விலாவாரியாக செய்திகளாகவும், காணொளிகளாகவும் வெளியிட்டிருந்தன.

ஆனால், வேதனை துருக்கியைத் தவிர வேறு எந்த முஸ்லிம் அல்லது அரபு நாடுகளும் இம்மக்களுக்கு இரக்க காட்ட முன்வரவில்லை. ஆகக் குறைந்தது இந்த பேரினவாத பௌத்த துறவிகளின் கோரத்தனத்தைக்கூட நிறுத்த முடியாமல் போய்விட்டது இப்பெயர்தாங்கி அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மலேசியாவும் இந்தோனேசியாவும் சில நிபந்தனை அடிப்படையில் அகதிகளுக்கு இடமளித்தாலும் மனமுவந்த இடத்தை இன்னும் வழங்கவில்லை. பங்களாதேஷ் தொடர்ந்தும் விரட்டிக்கொண்டே இருக்கின்றது.

அரபிக்காரர்கள் இலங்கை வரும்போது அவர்களது அருகில் நின்று அடிமைகள்போல் புகைப்படங்களுக்கு பல்லைக்காட்டாமல், அந்த அரபியிடம் எரியும் பர்மா பற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும். இத்தகைய அரபிகளுக்கு முன்னால் காகித அட்டையைப் பிடித்து நிற்கவேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆம். ஏசி அறைக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும், கடற்கரையிலும் உட்கார்ந்துகொண்டு பகுதி நேரமாக முகநூலில் மியன்மார் முஸ்லிம்களுக்கு படங்களை மாற்றி முசுப்புக்காட்டாமல் புறப்பட வேண்டும்.

எங்கு?

இலங்கையிலுள்ள அரபு, இஸ்லாமிய தூதரகங்களுக்கு முன்னால் அணிதிரண்டு இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பை வெளிக்கொணர வேண்டும். இத்தகைய பெயர்தாங்கி இஸ்லாமிய அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

யார் பங்குபற்ற வேண்டும்?

அரசியல்வாதிகள், அவர்களது ஆதரவாளர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள் உட்பட அனைத்துள்ளங்களும் கலந்துகொள்ள வேண்டும்.

protest burma (3)

செயல்பட முடியுமா?

இங்குதான் கேள்வியும், ஈமானியப் போராட்டத்தில் பலவீனமும் ஆரம்பமாகிறது. போர் என்றால் போர்க்களத்திற்கு போக வேண்டுமே தவிர, ஒப்பாரிவைத்து பயனில்லை. வீட்டுக்குள், அலுவலகங்களுக்குள், கடற்கரையில் இருந்துகொண்டு முகநூலில் மாத்திரம் பர்மா முஸ்லிம்களுக்குக் முதலைக்கண்ணீர் வடிப்பதால் அம்மக்களைக் காப்பாற்ற முடியாது.

அரசியல் அழுத்தம்:

போராட்டத்திற்கு தயாரானால் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழுத்தம்

அரபு நாட்டில் இருந்துகொண்டு அரபிக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாது. இதனால் இலங்கையில் உள்ள ஈமானிய உள்ளங்கள் இலங்கையிலுள்ள அரபி மற்றும் இஸ்லாமிய தூதரகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது தொலைNhசி மூலமாகவோ அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.

இலங்கையில் மாத்திரமன்றி, மேற்கத்தேய நாடுகளில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடான அழுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மூலம் உறங்கிக்கிடக்கும் அரபு நாடுகளை விழிப்படையச் செய்ய முடியும்.

எப்போதெல்லாம் செயற்பாடில்லாமல் நாங்கள் போராட்டங்களை நடாத்திகிறமோ அப்போராட்டம் வெற்றிபெறமாட்டாது. எமது செயல்களைத்தான் அல்லாஹ் எதிர்பார்க்கிறான். முகநூலில் அடையாளப் படத்தை மாற்றுவது சிரமமான காரியமல்ல. ஆனால், இத்தகைய தூரகங்களுக்கு முன்னால் நின்று போராடுவது கடினமான காரியம். இங்குதான் எமது ஈமானின் உறுதியும் பர்மா முஸ்லிம் மக்கள் மீதான உண்மையான அன்பும் எங்களிடமிருந்து வெளிப்படும்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இஸ்ரேல் காசாவைத் தாக்கியது. எத்தனையோ முகநூல் பயனாளர்கள் தங்களது அடையாளப்படத்தை காஸாவுக்காக மாற்றினார்கள். பயன் எதுவுமில்லை. ஹமாஸ் இறுதிவரை போராடியது. ஹமாஸின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இஸ்ரேல் பல கட்ட யுத்த நிறுத்தத்தின் பின்னர் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று தாக்குதலைக் கைவிட்டது.- ஹமாஸ் செயல்பட்டது.

இதேபோல் கடந்த வருடம் ஜூன் மாதம் அழுத்கமை எரிந்தது. முகநூல் பயனாளர்கள் தங்களது அடையாளப்படங்களை மாற்றிக்கொண்டனர். போராட்டம் முகநூல் அடையாளப்பட மாற்றத்தால் நின்றதா? – மக்கள் செயல்பட்டனர்.

“ஹர்த்தால் போட்டால் முழு இலங்கை முஸ்லிம் கிராமங்களும் தாக்கப்படும்” என அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை முஸ்லிம்கள் அதிகமானவர்கள் கலத்தில் இறங்கி, இலங்கை முழுவதிலும் ஹர்த்தால் ஏற்பாடு செய்து, கண்டனத்தை செயல்ரீதியாக எடுத்துக்காட்டியபோது அரசாங்கமும் பேரினவாதமும் ஆடிப்போனதை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள் சகோதரர்களே…?

மியன்மார் பிரச்சினை முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவை என்பதால் மேற்கத்தேய நாடுகள் குறிப்பாக அங்குள்ள அரசாங்கங்கள் வாய்மூடி இருக்கின்றன.

பலஸ்தீனுக்கு எதிராககக் குரல்கொடுக்கும், அம்மக்களின் விடுதலைக்கான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் எத்தனை ஐரேர்ப்பிய அரபிகள், மியன்மார் பிரச்சினையை தங்களது சமூகப் பிரச்சினைகளாக எடுத்துக்கொள்வதில்லை. அழுத்கமை பற்றி எரிந்தபோது, எந்த அரபியும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும் செய்ய முன்வரவில்லை.

உலகில் பொருளாதாரத்தையும், எண்ணெய் வளத்தையும் கொண்டு செழிப்பாக விளங்கும் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் அமைதிகாக்கும்போது, மேற்குலகம் எதற்கு வாய்திறக்க வேண்டும் என்பதை நாங்கள் எங்களிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்.

எனவே, போரட்டம் செயல்ரீதியாக இடம்பெற வேண்டுமே தவிர, முகநூலில் அடையாளப்புகைப்படங்களை மாற்றி, முஸ்லிம்கள் சோம்பேறிகள் என்பதையும் ‘உசார் மடையர்கள்’ என்பதையும் ykkஉலகுக்கு எடுத்துக்காட்டி பிற சமூகம் நகைக்க இடமளிக்கக்கூடாது என்பதையும் தயவுடன் கூறிக்கொள்கிறோம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!!

அல்லாஹூ அக்பர்!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s