தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஆலோசனைகள்

Examஇவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஆலோசனைகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் பரீட்சார்த்திகளுக்கென வெளியிட்டுள்ள ஆலோசனைகள் வருமாறு:

01. வினாப் பத்திரங்கள் இரண்டு வழங்கப்படும்.

முதலாவது வினாப் பத்திரம் காலை 9.30 முதல் காலை 10.15 வரையில் 45 நிமிடங்கள்

இரண்டாவது வினாப் பத்திரம் 10.45 முதல் நண்பகல் 12.00 மணி வரை 1 மணியும் 15 நிமிடங்கள்

02. காலை 9.00 மணிக்கு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை பரீட்சை மண்டபத்தினுள்ளே அமரச் செய்ய வேண்டும். இது தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

03. பரீட்சார்த்திகள் தங்களது சுட்டிலக்கங்களை தனது ஆடையின் இடது பக்க மேல் பகுதியில் அணிந்திருத்தல் வேண்டும்.

04. விடை எழுதுவதற்கு பேனா அல்லது பென்சில் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்த முடியும்.

05. பரீட்சை சுட்டிலக்கத்தை தெளிவாக எழுதவும், வினாத்தாளில் 01 ஆம் பக்கத்திலும், 03 ஆம் பக்கத்திலும் இதற்கான பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

06. விடை எழுதும் போது வினாப் பத்திரத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

07. பரீட்சை வினாத்தாள் கையில் கிடைத்தவுடன் பதற்றப்பட வேண்டாம். வினாப் பத்திரத்தை சிறந்த முறையில் வாசித்து விடை எழுதவும்.

08. செய்கை வழிக்கான மேலதிக தாள்கள் வழங்கப்படும்.

பெற்றாருக்கான ஆலோசனைகள் :

01. காலம் தாமதிக்காமல் பரீட்சை மண்டபத்துக்கு பிள்ளைகளை அழைத்து வர வேண்டும்.

02. பெற்றோர் பரீட்சை மண்டபம் அமையப் பெற்றுள்ள பிரதேசத்திற்குள் பிரவேசிக்க கூடாது.

03. மாணவர்களின் இடைவேளை நேரத்தில் பெற்றோர் பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

04. மாணவர்களுக்கு சிறியளவிலான உணவும், தண்ணீர் போத்தல் ஒன்றும் கொடுத்து அனுப்புங்கள்.

பரீட்சை தொடர்பிலான மேலதிக அறிவுறுத்தல்கள் பெற வேண்டியிருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பெற்றோர் தொடர்புகொள்ளலாம் எனவும் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள: 1911
பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழு:
0112 784208
0112 784537
0112 3188350
0112 3140314
பொலிஸ் நிலையம் : 0112 42 11 11
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் : 119

  • M. மஸூத் காஸிமி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s