காணாமல் போகும் சவுதி இளவரசர்கள்

saudiலண்டன்: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று சவுதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள். அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சவுதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதன் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

2003-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் நாள், ஒரு சவுதி இளவரசர், ஜெனீவாவின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அவர் பெயர் சுல்தான் பின் துர்க்கி பின் அப்துல் அஜீஸ். அந்த அரண்மனை மறைந்த சவுதி  மன்னர் ஃபஹத்துக்குச் சொந்தமானது. அவரை அந்த அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தவர் மன்னர் ஃபஹத்தின் மகன் இளவரசர் அப்துல்அஜீஸ் பின் ஃபஹத்.

சுல்தான் சௌதி அரசு மீது முன்வைக்கும் விமர்சனங்கள் மீதான சர்ச்சர்களைத் தீர்த்துக்கொள்வதற்கு, அப்துல் அஜீஸ் அவரை சவுதி அரேபியாவுக்கு  திரும்பச் சொல்கிறார்.

சுல்தான் அதை மறுக்க, ஒரு தொலைபேசி அழைப்பு செய்தவதற்காக அப்துல்அஜீஸ் செல்கிறார். அந்த அறையில் இருந்த இன்னொரு நபரான, இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவுதி அமைச்சர், ஷேக் சாலேஹ் அல்-ஷேக்கும் அந்த அறையை விட்டுப் போகிறார். கொஞ்சம் நேரம் கழித்து, முகமூடி அணிந்த நபர்கள், அந்த அறைக்குள் வருகிறார்கள். சுல்தானை அடிக்கும் அவர்கள், அவருக்கு கைவிலங்கிடுகிறார்கள். பின்னர், அவர் கழுத்தில் ஒரு ஊசி சொருகப்படுகிறது.

saudi

சுயநினைவற்ற சுல்தான் ஜெனீவா விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறார். அங்கு காத்திருக்கும் மருத்துவ சேவைக்காகப் பயன்படுத்தப்படும் ‘மெடவேக்’ ஹெலிகப்டருக்கு அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.
இவை யாவும், ஒரு சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் சுல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவை.

விருந்துக்குச் சென்ற சுல்தான் திரும்பி வருவார் என்று அவரின் விடுதி அறையில் காத்திருந்த அவரது பணியாளர்களில், அவரது தகவல் தொடர்பு அலுவலர் எட்டி ஃபரைராவும் ஒருவர்.

“அவர் திரும்பாமல் நாள் கழியக் கழிய பெரும் நிசப்தம் நிலவியது,” என்று நினைவு கூறும் ஃபரைரா, “எங்களால் பாதுகாப்புக் குழுவையும் அணுக முடியவில்லை. அதுவே எங்களுக்கு முதல் எச்சரிக்கையாக இருந்தது இருந்தது. இளவரசரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை,” என்கிறார்.

அன்று மதியம், இரண்டு எதிர்பாராத நபர்கள் வருகை தருகிறார்கள்.

“சுவிட்சர்லாந்துக்கான சவுதி தூதர், அந்த ஆடம்பர விடுதியின் மேலாளருடன் வந்து, எங்கள் அறையைக் காலி செய்துவிட்டு, உடனே வெளியேறுமாறு கூறினார்,” என்று கூறிய ஃபரைரா, இளவரசர் சுல்தான் சௌதி தலைநகர் ரியாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால், எங்கள் சேவை அவருக்குத் தேவைப்படவில்லை என்று தெரிவித்தார்.

தனது சொந்தக் குடும்பத்தினரே அவருக்குக் கட்டாயமாக மயக்க ஊசி செலுத்தி, கடத்தி செல்லும் அளவுக்கு இளவரசர் சுல்தான் என்ன செய்தார்?

அந்தச் சம்பவம் நடந்ததற்கு முந்தைய ஆண்டு ஐரோப்பாவிற்கு மருத்துவ சிகிச்சை பெற வந்த அவர், சவுதி அரசை விமர்சனம் செய்து பேட்டி கொடுக்கத் தொடங்கினார். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை விமர்சித்த அவர், அங்குள்ள அரச குடும்பத்தினரும் அதிகாரிகளும் ஊழல் செய்தகாகக் குற்றம்சாட்டினார்.

அங்கு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இபின் சௌத் என்று அழைக்கப்படும் மன்னர் அப்துல்லஸீஸ், 1932-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை நிறுவிய நாள் முதல், அந்நாடு சர்வாதிகாரம் நிறைந்த முடியாட்சியில்தான் உள்ளது.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள்.

அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சௌதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதன் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

இளவரசர் துர்க்கி பின் பந்தர் ஒரு காலத்தில் சௌதி காவல் துறையில் மேஜராக இருந்தவர். அரச குடும்பத்தைக் காவல் காக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆனால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு கசப்பான ஒரு சொத்துத் தகராறில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

2012-இல் அவர் விடுவிக்கப்பட்டதும் பிரான்ஸ் தலைநகர் பாரிக்குப் பறந்த அவர், சௌதி அரசை விமர்சித்து, அங்கு சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி யூ டியூபில் காணொளிகள் வெளியிடத் தொடங்கினார்.

சுல்தானிடம் செய்ததைப் போலவே அவரையும் நாடு திரும்ப வைக்க சௌதி அரசு முயற்சித்தது. அவரைச் சந்தித்த சௌதி உள் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அகமது அல்-சாலேம், அவருடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டார்.

இளவரசர் துர்க்கி பின் பந்தர் ஒரு காலத்தில் சவுதி காவல் துறையில் மேஜராக இருந்தவர். அரச குடும்பத்தைக் காவல் காக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆனால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு கசப்பான ஒரு சொத்துத் தகராறில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

2012-இல் அவர் விடுவிக்கப்பட்டதும் பிரான்ஸ் தலைநகர் பாரிக்குப் பறந்த அவர், சௌதி அரசை விமர்சித்து, அங்கு சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி யூ டியூபில் காணொளிகள் வெளியிடத் தொடங்கினார்.

சுல்தானிடம் செய்ததைப் போலவே அவரையும் நாடு திரும்ப வைக்க சவுதி அரசு முயற்சித்தது. அவரைச் சந்தித்த சவுதி உள் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அகமது அல்-சாலேம், அவருடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டார்.

“அனைவரும் உங்கள் வருகையை எதிர்நோக்கியுள்ளனர். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,” என்று கூறுகிறார்.

“என்னுடைய வருகையையா,” என்று கேட்கும் இளவரசர் துர்க்கி, “வேசி மகனே! சுல்தான் பின் துர்க்கியை திரும்ப இழுத்துச் சென்றதைப்போலவே உன்னையும் இழுத்துச் செல்வோம் என்று உங்கள் அதிகாரிகள் எனக்கு அனுப்பிய கடிதங்கள் என்ன ஆனது,” என்கிறார்.

“அவர்கள் உங்களைத் தொடக்கூட மாட்டார்கள். நான் உங்கள் சகோதரன்,” என்று அமைச்சர் பதில் அளிக்கிறார்.

“இல்லை. அவை உன்னிடம் இருந்து வந்த கடிதங்கள். உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகமே அந்தக் கடிதங்களை எனக்கு அனுப்பியது,” என்கிறார் இளவரசர் துர்க்கி.

ஜூலை 2015 வரை காணொளிகளை வெளியிட்ட அவர், சிறிது காலத்தில் காணாமல் போகிறார்.

“ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அவர் என்னை அழைப்பார்,” அவரது நண்பரான, வலைப்பதிவாளர் மற்றும் செயல்பாட்டாளர், வாய்ல் அல்-கலாஃ ப்.

“பின்னர் நான்கு-ஐந்து மாதங்கள் அவர் காணாமல் போனார். எனக்கு அப்போது சந்தேகம் ஏற்பட்டது. சவுதி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மூலமாகத்தான் இளவரசர் துர்க்கி பின் பந்தர் அவர்களின் பிடியில் இருப்பது தெரிந்தது. ஆக, அவர் கடத்தப்பட்டுள்ளார்,” என்கிறார் அல்-கலாஃப்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s