சஊதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது

sahani saudiறியாத்: தென்மேற்கு சஊதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். சஊதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்துல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.தியேப் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்துல்லா அல் ஷஹானி செய்துள்ளார்.

சஊதி அரேபியாவில் டாபிங் தடை செய்யப்பட்டுள்ளது. டாபிங் போதை கலாசாரத்துடன் தொடர்புடையதாக சஊதி அதிகாரிகள் கருதுகின்றனர்.

sahani saudi

அல் ஷஹானி `டாபிங்` செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் இதனை மறுபதிவு செய்தனர்.அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,ஹிப்-ஹாப்பில் இருந்து டாபிங் உருவானதாகக் கருதப்படுகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல பிரபங்கள் டாபிங்கை செய்ததால் உலகம் முழுவதிலும் இது பரவியது. டாபிங் போதை பயன்பாட்டைக் குறிக்கிறது என சஊதி அதிகாரிகள் கருதுவதால், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இதற்கு தடை விதித்தது.

saudi

அல் ஷஹானி திட்டமிட்டு டாபிங் செய்தாரா அல்லது இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போது இயல்பாகச் செய்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை. “இசை நிகழ்ச்சியில் தற்செயலாக டாபிங் செய்ததற்கு, நமது மரியாதைக்குரிய அரசிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். தயவுசெய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்“ என செவ்வாயன்று அல் ஷஹானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s