மட்டக்களப்பு: மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்டு தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவாகியுள்ள இரு தமிழ் வீரர்களில் தனுசாந்தும் ஒருவராக உள்ளார். இவர் படுவான்கரை – கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்வி கற்று வருகிறார்.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கை தேசிய அணியில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே போல் யாழ்ப்பாணத்திலிருந்தும் சில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். எனினும் இதுவரையில் அவர்கள் சர்வதேசப் போட்டி ஒன்றில் இடம்பெறாதது அனைவரையும் ஏமாற்றமடைய வைத்தது. இதே போல் இவ்விளைஞனின் கனவும் தகர்க்கப்படுமோ என சம்பந்தப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.
Leave a comment