சிறைப்படுத்தப்பட்ட “தௌஹீத்”

  • AK-77

ntj zahranகாத்தான்குடி: 2000ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தௌஹீத் எழுச்சி காத்தான்குடியில் உருவானது. மத்ரஸாக்களில் ஓதும் மாணவர்கள் தொடக்கம், அரபு நாடுகளில் பட்டம் பெற்ற மகான்கள் வரை தௌஹீத்வாதிகளாக தங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாய் இருந்தனர். மத்திய கிழக்கிற்குச் சென்றுவந்தவர்களும், பொதுவாக சிந்தித்து நடப்பவர்களுள் பலரும் தௌஹீதில் இணைந்தனர்.

சிறுபிள்ளைகளாகவும், மார்க்கத்தில் முதிர்ச்சியடையாதவர்களாகவும் செயற்பட்ட நவீன உலமாக்கள் சிலரால், போட்டியும், பொறாமையும், தற்பெருமையும், சீதனம், அரபிப் பணமும், அரசியலும், ஊர்ப் புகழும் இவர்களுக்குள் குடிபுகுந்து, காலப்போக்கில் 6 கிளைகளாகவும், தனித்தனிக் கிளைகளாகவும் தௌஹீத் பிரிந்தது.

இவர்களின் பிரிவால் ஊரில் பிரிவுகளும், போட்டியும், குடும்பச் சண்டைகளும் ஏற்பட்டன. சர்வதேசப் பிறை என்றும், உள்ளுர் பிறை என்றும் ஆளாளுக்கு வெண்திரையையும், ஒலிவாங்கியையும் கையிலெடுத்துக்கொண்டு, சந்திபொந்துகளில் வாதித்தனர் தௌஹீத் வாதிகள். இறுதியில் முகநூலில் சண்டைபிடித்து, எதிரி எனக் கருதப்படுபவர்களின் தனிப்பட்ட, குடும்ப விவகாரங்களைக்கூட முகநூலில் பதிவிடும் அளவுக்கு, தௌஹீத் சென்றது.

முஸ்லிம்கள் தாக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டாலும்  அண்மைக்காலமாகக் குரல் கொடுப்பதில் முன்னின்ற இரு தௌஹீத் இயக்கங்களான சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத், மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புக்கள் சுட்டிக்காட்டத்தக்கது.

ntj zahran

வெள்ள அனர்த்தமென்றாலும், மண்சரிவு என்றாலும் களத்தில் இறங்கி உதவும் இயக்கங்கள் இவை. அண்மைய வெள்ளமும், அனர்த்தமும் இவ்வியக்கங்கள் இயங்காததால் நிதி சேகரிப்பில் மந்த நிலைமை தோன்றியதையும் காணமுடிந்தது.

பேரினவாதிகளை எதிர்த்து பேசியதால், SLTJஅமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் அப்துர் ராஸிக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், SLTJ அடங்கி விட்டது.

இதுவரை உடனுக்குடன் அநீதிகளைக் கண்டித்துவந்த இவ்வியக்கம், கடந்த மாதம் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட பேரினவாதத் தாக்குதல்களைக் கண்டித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

இதே போல்தான், காத்தான்குடியில் 40 வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் அப்துர் ரஊப் மௌலவியின் “எல்லாம் அவனே” கொள்ளையை எதிர்ப்பதில், காத்தான்குடி வரலாற்றில் சரித்திரம் படைத்த இளம் மார்க்க அறிஞர் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாஅத், தற்பொழுது முடக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிவாயல் இயங்கினாலும், தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் ஆளுமை முறித்தெறியப்பட்டிருக்கிறது.

ntj hizbullah

எதிரிகளுக்கு மத்தியிலும், அரசியல் அழுத்த சவால்களுக்கு மத்தியிலும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல மாநாடுகளை நிதானமாக நடத்தி வெற்றிகண்ட தேசிய தௌஹீத் ஜமாஅத், டீன் வீதி மாநாட்டில் தங்களது, பொறுமையை இழந்ததன் காரணமாக திட்டமிட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

டீன் வீதிச் சம்பவத்தின் பின்னர் ஐ.எஸ் பயங்கரவாதிகளாக NTJ இயக்கத்தை சித்தரித்து, பல செல்வாக்குகளுக்கும், இலஞ்ச அன்பளிப்புக்களுக்கும் மத்தியில் மௌலவி சஹ்ரானும், அவரது இயக்க உறுப்பினர்கள் சிலரும் குறித்த சம்பவத்தின் பின்னர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

வசதியில்லாத ஏழை தொழிலாளர்களை அதிகம் கொண்டியங்கும் தேசிய தௌஹீத் ஜமாத்திற்கு, அரசியல்வாதிகளின் செல்வாக்கு இல்லை. ஊர் தலைமைகளின் செல்வாக்கில்லை. பணம், பொருள் இல்லை. இதன்காரணமாக பிணையில் கூட சிறைப்படுத்தப்பட்டவர்களை வெளியில் எடுக்க முடியாத பரிதாபம் தௌஹீதிற்கு ஏற்பட்டிருக்கிறது.

சகோதரத்துவ தௌஹீத் அமைப்புக்களும், அப்துர் ரஊப் தரப்பினரும், ஸஹ்ரானின் பயானால் பாதிக்கப்பட்டவர்களுமே மௌலவி ஸஹ்ரான் சிறையில் இருப்பதில் அதிகமாக சந்தோசப்படுகின்றனர்.

Ntj shibly nfgg

தன்னிடம் ஆயுதம் இருப்பதாகவும், பணம் கொடுத்து, தனது உறுப்பினர் சிலரை விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுக்க அனுப்பியதாகவும் பகிரங்கமாகக் கூறிய மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர் ஊருக்குள் வழமையைவிடவும் சிறப்பாக தங்களது நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

மௌலவி ஸஹ்ரான் இல்லாதததால் குழப்பமில்லாமல் பெருநாள் கொண்டாடியதாக நோன்பு பிடிக்காதவனும், வட்டிக்குக் கொடுப்பவனும், எடுப்பவனும், மோசடிக் காரனும், விபச்சாரம் புரிபவனும், குடிகாரனும் அதிகம் அதிகமாக கூறிப் பெருமைப்படுகிறான். முகநூலில்கூட சில முட்டாள்களைத் தவிர, இம்முறை உள்ளுர்-சர்வதேசப் பிறை சண்டையும் குறைந்தே காணப்பட்டது.

ntj

மௌலவி ஸஹ்ரான் வெளியில் வந்தால்கூட இனிமேல் பழைய ஸஹ்ரானையோ அவரது இயக்கத்தையோ காணமுடியாது. SLTJ போன்று அடங்கிப்போய்விடும்.

ஊரில் எவருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது.

அஸாத் ஸாலியும், அப்துர் ரஊப் மௌலவி தரப்பும் கூறுவது போல ஐ.எஸ் தீவிரவாதிகளாகவே பார்க்கப்படுவர் “வஹாபித் தௌஹீத் வாதிகள்”!!AK-77

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s