மட்டக்களப்பில் இப்றாஹீம் சாப்பாட்டுக்கடை முற்றுகை!

batticalao hotelமட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல சாப்பாட்டுக்கடைகளுள் இப்றாஹீம் சாப்பாட்டுக்கடையில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (30) பிற்பகல் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

batticalao hotel

இதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

இதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

ibrahim hotel batticaloa

அத்துடன் அங்கு உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இருக்கவில்லையென்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடைக்கு முன் “மாஷாஅல்லாஹ்” என்று போட்டால் மட்டும் போதாது, .இறை நம்பிக்கையின் அரைவாசியான சுத்தமும் உணவகத்தில் பேணப்படல் வேண்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s