டெல்லியில் சிறுநீர் கழிப்பதை தடுத்த ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை

indiaடெல்லி: டெல்லியின் வடக்கு பகுதியில் 32 வயது ரவிந்தர் குமார் என்னும் பெட்டரி ரிக்க்ஷா ஓட்டுநர், சாலையில் சி்றுநீர் கழிக்க வந்த நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரவிந்தர், டெல்லியின் குரு டெக் பஹதூர் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே சிறுநீர் கழிக்க வந்த இரண்டு நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நியூ கிஷோர் மார்க்கெட் காலனியில் அமைந்துள்ள ரவிந்தரின் இல்லம், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 150 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. ரவிந்தருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்தார்.

சனிக்கிழமை மதியம் சுமார் 1.30 மணிக்கு ரவிந்தரும் அவரின் நண்பர்கள் பிரமோத் மற்றும் அரிஃப் ஆகியோரும் அந்த மெட்ரோ நிலையத்திற்கு அருகில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது தூரத்தில், மது அருந்திய நிலையில் கையில் பீர் பாட்டிலுடன் இரண்டு பேர், பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயன்றனர்.

india

“நாங்கள் அவர்களை தடுக்க முயன்றோம். நாங்கள் இங்கு உணவருந்திக் கொண்டிருக்கிறோம், நீங்கள் வேறேங்காவது சிறுநீர் கழியுங்கள் என்று கூறினோம் ஆனால் அவர்கள் எங்களை தவறாக பேசினாரகள்” என்கிறார் பிரமோத். அதில் ஒருவர் மாலை திரும்பி வரப்போவதாக அச்சுறுத்தி சென்றார். ஆனால் அது அத்துடன் முடிந்துவிட்டதாக நினைத்த ரவிந்தர் தனது வேலையை தொடர்ந்தார்.

பின் இரவு 8.30 மணிக்கு ரவிந்தர் தனது பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு டஜன் நபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிக்க தொடங்கினர். அப்போது அவருடன் மற்றொரு ரிக்க்ஷா ஓட்டுநர் மனோஜும் உடனிருந்தார். “அவர்கள் செங்கல் மற்றும் துணியில் கற்களை சுற்றி அதை ஆயுதமாக பயன்படுத்தி ரவிந்தரை தொடர்ந்து தாக்கினார்கள்” என கூறுகிறார் மனோஜ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s