ஞானசார விவகாரமும் நம்மவர்களும்…..

  • AK-49

boduகொழும்பு: ஞானசார என்ற மெண்டலின் விவகாரங்கள்தான் இப்போது இலங்கையில் ஹைலைட்டாக இருக்கின்றன. ஞானசார சிறுநீர் கழிப்பதிலிருந்து அவன் உறங்கும் வரைக்கும் எதையெல்லாம் எழுதி பதிவிட முடியுமோ அவைகளை எழுதிப் பதிவிட்டு, குளிர்காய்ந்து வருவது மட்டுமில்லாமல் சம்பந்தமில்லாமல் மாஷா அல்லாஹ் என்று கொமண்ட்ஸ் அடிப்பதிலும் மூளையில்லா எம் சமூகம் அலைமோதுகிறது.

அமெரிக்க அரசியலுக்கு எப்படி இஸ்ரேல் துரும்புச் சீட்டாக இயங்குகிறதோ, அதே போல்தான் இலங்கை அரசியலுக்கு பொதுபல சேனா துரும்புச்சீட்டாக செயல்படுகிறது.

அற்ப காசுக்கும் சுகத்துக்கும் மஹிந்தவுக்கும், ரணிலுக்கும் சோரம்போகும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமோ, ஜம்மிய்யத்துல் உலமாவிடமோ பேரினவாதிகள் எதிர்பார்க்கும் “சரக்கு” இல்லாததால், பேரினவாதம் குறிப்பாக 2012 ஹலால் அகற்றலிருந்து தீயாக பரவி வருகிறது.

bodu

இந்தப் பேரினவாதத் தீயின் உருவமாகச் செயற்படும் ஞானசார இன்றைக்கோ அல்லது நாளைக்கோ கைது செய்யப்படுவான், அத்துடன் சகல பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்ற நப்பாசையில் இன்றும் மண்டைச் சரக்கில்லாத நம்மவர்கள் எதிர்பார்த்துக்காத்திருப்பது வேடிக்கை.

ஞானசாரவைக் கைது செய்தால், அடுத்த நிமிடம் அவன் வெளியில் வரக்கூடிய அளவுக்கு அத்தனை சட்ட ஓட்டைகளும் காத்திருக்கின்றன. அரசியல் பின்புலங்களும், அரசும் காத்திருக்கின்றன.

ஞானசாரவை சிங்கவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் என்ற போதிலும், ஞானசார விடயத்தில் இன்னும் அஸ்கிரியவும், மல்வத்த பீடமும் மௌனம் காப்பது, இலங்கையில் இனவாதம் இருக்க வேண்டும் என்பதைப் பறை சாற்றுகிறது. இனவாதமிருந்தால்தான் சிங்கள நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அநேகமான பௌத்த மக்களிடமும் இருக்கின்றதையும் மறுக்க முடியாது.

bodu

எமது மனைவி, பிள்ளைகள், வியாபார நிலையங்கள் மீது, பேரினவாதம் விரித்தாடினால் நாங்கள் குனூத் ஓதிக்கொண்டு, வீட்டிற்குள் அடைபட்டிருக்க முடியாது. இதேபோல்தான் அல்லாஹ்வின் இல்லங்களும், அவனது மார்க்கமும் கேலி செய்யப்பட்டு, தாக்கப்படும் போது எம்மால் குனூத் மட்டும் ஓதிக்கொண்டு வீட்டிற்குள் முடிங்கிக்கிடக்க முடியாது.

எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், ஜம்மிய்யத்துல் உலமாவாலும் ஞானசாரவின் பேரினவாதத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், இலங்கை முஸ்லிம்களால் முடியும் என்பதை நிரூபிக்கும்நாள் இன்ஸா அல்லாஹ் விரைவில் இந்நாட்டில் ஏற்படும்!-AK-49

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s